மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

அனைத்து மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

குதிரை வலு 48 கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யத் தேவையில்லை எனச் சில மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்கள் கூறிவருவது அவதானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பதிவு செய்யப்படாமல் பொது வீதிகளில் இவற்றைச் செலுத்திச் செல்லும்போது அதன் சாரதிகளுக்கு பொலிஸாரால் அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் வாகனங்களை பதிவு செய்வது கட்டாயமாகும் என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts