துணுக்காயில் அதிகாலையில் பரபரப்பு! வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு புகுந்த 2 காட்டு யானைகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட யோகபுரம் மத்தி, கிராம அலுவலர் பிரிவில் கடந்த 12 ஆம் திகதி காலை 5.55 மணியளவில் திடீரென வீட்டின் நுழைவாயிலை உடைத்துக்கொண்டு இரண்டு காட்டு யானைகள் வீட்டுவளவிற்குள் நுழைந்த சம்பவம் பதிவாகி உள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மீண்டெழும் மக்களுக்கு அண்மைய நாட்களில் காட்டு யானைகளால் ஏற்படுத்தப்படும் அழிவுகளானது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே காட்டு யானைகளின் தாக்கங்களில் இருந்து மக்களை பாதுகாக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts