நாட்டில் இன்றும் 100 மி.மீற்றருக்கும் அதிகமான மழை!

நாட்டை அண்மித்துள்ள வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் கீழ் வளிமண்டலக் கொந்தளிப்பு நிலை காரணமாக, நாட்டில் மழையின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தின் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் 75 மி.மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts