வங்கி இரகசியத் தகவல்களை பாதுகாக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை!!

இணையவழி பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில் இணைய மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மக்களின் அலட்சியத்தை பயன்படுத்தி இணைய குற்றவாளிகள் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை திருடக்கூடும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

”தானியங்கி பணப்பரிமாற்ற இயந்திரத்தின் கடவுச்சொல் (PIN), இணைய வங்கி கடவுச்சொல் மற்றும் ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP) உள்ளிட்ட எந்தவொரு இரகசிய தகவலையும் குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் உட்பட வேறு எவரிடமும் பகிர வேண்டாம்.

வங்கிகள் இத்தகைய இரகசிய தகவல்களை தொலைபேசி அல்லது வேறு வழிகளில் பொதுமக்களிடம் கோருவதில்லை.

தொலைபேசிக்கு குறுஞ்செய்தியாக வரும் ஓ.டி.பி (OTP) எண்ணை எவரிடமும் தெரிவிக்க வேண்டாம். வங்கிக் கணக்குகளுக்குள் நுழைந்து பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மோசடியாளர்கள் இத்தகைய தகவல்களை பயன்படுத்தக்கூடும்.” என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Posts