சூர்யா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்.
பல வருடங்கள் ஹிட் இல்லாமல் இருந்த சூர்யா கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என இரண்டு பேக் டூ பேக் மெகா ஹிட் படங்களை கொடுத்து வசூல் நாயகன் ஆகிவிட்டார்.

இந்நிலையில் சூர்யா தன் அடுத்தடுத்த படங்களில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறாராம், அதில் அடுத்து ஜெய் பீம் ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
அதை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கும் படம் என ப்ளான் செய்த இவர், தனது 50வது படத்தை மெகா ஹிட் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கொடுத்துள்ளதாகவும், அதுவும் ரோலெக்ஸ் கதாபாத்திரம் முழுப்படமாக வரும் எனவும் கூறப்படுகிறது.
இது அனைத்தும் நடந்தால் விஜய் இடத்திற்கு சூர்யா தான் அடுத்து வருவார் என்றே தெரிகிறது.