தமிழக முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கை வாபஸ் செய்திருந்த நிலையில் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பலர் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில் பத்திரிகையாளர் அந்தணன் தன்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், அனைவருக்குமே தனிப்பட்ட வாழ்க்கை என்ற ஒன்று இருக்கிறது. அதை உட்கார்ந்து ஆராய்ந்து இதை செய்ய வேண்டும், அதை செய்யக்கூடாது என சொல்வதற்கு யாருக்குமே உரிமை இல்லை. நான் அப்பழுக்கற்றவன் என்று யாருமே சொல்ல முடியாது. எல்லோரின் பின்பும் கறை இருக்கிறது. அப்படி விஜய்யை இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.
எதை செய்ய வேண்டும் என்று அவருக்கு தெரியாதா. யாரும் முயற்சி செய்யாத ஒன்றை செய்து இந்த இடத்திற்கு வந்தவருக்கு அட்வைஸ் செய்யாதீங்க என்று அந்தணன் கூறியுள்ளார்.