யாழ் இந்துக் கல்லூரி மற்றும் அதிபர் தொடர்பான அவதூறான காணொளியை அகற்ற நீதிமன்றம் கட்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் அதன் அதிபருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், கல்லூரியிலிருந்து இந்து மதச் சின்னங்கள் அகற்றப்பட்டதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்ட காணொளியை முகநூலில் பதிவேற்றிய நபருக்கு எதிராக அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கை 20.08.2026 அன்று பரிசீலித்த யாழ்ப்பாணம் கெளரவ நீதிவான் நீதிமன்றம், மேற்படி காணொளியை உடனடியாக அகற்றுவதுடன், காணொளி வாயிலாக மன்னிப்புக் கோர வேண்டும் என்ற நிபந்தனையுடனான கட்டளையைப் பிறப்பித்துள்ளது. மேலும், கௌரவ மேலதிக நீதிவானால் எதிர்மனுதாரருக்கு அறிவித்தல் அனுப்புமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்த தவணை 03.09.2026 அன்று நடைபெறவுள்ளது.