தலைமன்னார், உருமலை முனைக்கு அப்பால் உள்ள இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (12) இரவு வேளையில் முன்னெடுக்கப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 9 இந்திய கடற்றொழிலாளர்களும், அவர்களின் படகுகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.