Whatsapp பயனர்களுக்கு அதிர்ச்சி!!

மெட்டா (Meta) நிறுவனத்தின் பிரபல குறுஞ்செயலி செயலியான வாட்ஸ்அப்பில் (WhatsApp), இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான பயனர்களின் கணக்குகள் திடீரென 24 மணி நேர ‘Review’ (மறுஆய்வு) நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணக்குகள் மறுஆய்வு நிலைக்குச் சென்றதால், பாதிக்கப்பட்ட பயனர்கள் வாட்ஸ்அப் மூலம் செய்திகளை அனுப்பவோ, பெறவோ முடியாமல் தற்காலிகமாகச் செயலிழந்து தவித்தனர். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்தத் தடை விதிக்கப்பட்டதால், அன்றாடத் தொடர்புகளுக்கு வாட்ஸ்அப்பை மட்டுமே நம்பியிருக்கும் பலரும் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்தச் திடீர் நடவடிக்கைக்கான தெளிவான விரிவான காரணத்தை மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், இது வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பேம் (Spam) செய்திகள், தானியங்கி முறையில் அனுப்பப்படும் மெசேஜ்கள் (Automation/Bots) மற்றும் சேவை விதிமுறைகளை (Terms of Service) மீறும் கணக்குகளைக் கண்டறிந்து முடக்குவதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் தானியங்கி பாதுகாப்பு அமைப்புகளை (Automated Systems) இயக்கி வருகிறது. இந்த சோதனையின் போதே பல கணக்குகள் தானாகவே ‘Review’ நிலைக்கு மாறியுள்ளன.

எந்தத் தவறும் செய்யாத தங்களின் கணக்குகளும் தவறுதலாக முடக்கப்பட்டுள்ளதாகக் கூறி, எக்ஸ் (X – ட்விட்டர்) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பயனர்கள் பலர் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட கணக்குகள் தவறுதலாகச் சிக்கியிருந்தால், வாட்ஸ்அப் செயலியின் முகப்புப் பக்கத்திலேயே கொடுக்கப்பட்டுள்ள ‘Request a Review’ (மறுஆய்வு கோரிக்கை) விருப்பத்தைப் பயன்படுத்தி மேல்முறையீடு (Appeal) செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீட்டைத் தொடர்ந்து, 24 மணி நேரத்திற்குள் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts