சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய மைல்கல் சாதனையை படைத்துள்ளார்.

SENA (South Africa, England, New Zealand & Australia) நாடுகளில் அதிக அரைசதங்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி அடித்த அரைசதம் SENA நாடுகளில் அவர் அடித்த 30 ஆவது அரைசதம் ஆகும்.
இதன் மூலம் விராட் கோலி SENA நாடுகளில் அதிக அரைசதம் அடித்த இந்திய வீரர் ஆகியுள்ளார். இதன் மூலம் இவர் ராகுல் டிராவிட் (29), சச்சின் டெண்டுல்கர் (25), எம்எஸ் தோனி (24) மற்றும் முகமது அசாருதீன் (17) ஆகியோரை முந்தியுள்ளார்.
கார்டிஃப் இல் நடைபெற்ற 2 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி 66 பந்துகளில் 65 ஓட்டங்களை குவித்தார். இந்த அரைசதம் மூலம் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் விவ் ரிச்சர்ட்ஸ்-ஐ சமன் செய்தார்.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 44 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 233 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
234 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 44.1 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ஓட்டங்களை பெற்று 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.