முன்னாள் பொலிஸ் மாஅதிபர் சி. டி. விக்ரமரத்ன மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துருகிரியாவில் உள்ள அவரது இல்லத்தில், துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தற்கொலையாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
பொலிஸ் திணைக்களத்தில் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிய சி. டி. விக்ரமரத்ன, இலங்கையின் 35ஆவது பொலிஸ் மாஅதிபராவார்.
தற்கொலையை தடுப்போம்!
நீங்கள் தனிமையில் இருப்பதாக உணருகின்றீர்களா அழையுங்கள்அவசர உதவிக்கு: தேசிய மனநல உதவி இலக்கம்: 1926
இலங்கை சுமித்ரயோ: 011 269 6666 /011 268 2535/ 0707 308 308
CCC line: 1333 (கட்டணம் அற்ற அழைப்பு)