தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணியை மருதங்கேணி பகுதியில் சுவீகரிக்க நடவடிக்கை!

வடமராட்சி கிழக்கு மருதங்கணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி சுபிகரிப்பு நடவடிக்கைகள் நாளை (09) இடம்பெறவுள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்று திரளுமாறும், காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இன்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார் .

அவர் மேலும் தெரிவித்ததாவது, மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும், மக்களின் காணிகளை அபகரிப்பதை ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இந்த அரசாங்கமும் மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தது.

ஆனால் இதுவரை எந்த காணிகளும் விடுவிக்கப்படவில்லை.

மக்களின் காணிகளை மக்களிற்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் இதற்காக நாளை மறுதினம் மருதங்கெனியில் அளவீடு செய்யப்படுகின்ற காணியை அளவீடு செய்யவிடாமல் தடுப்பதற்காக அனைவரும் ஒன்று திராலுமாறு கோரிக்கை விடுத்தார்.

Related Posts