மானிப்பாய் காளி விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த 24 அரச திணைக்கள அணிகள் பங்கேற்ற மென்பந்து கிரிக்கெட் போட்டித் தொடர் வெற்றிகரமாக நடைபெற்றது.


இத் தொடரில் மாவட்டச் செயலக அணி தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது.
இந் நிலையில் நேற்றுமுன்தினம் (05.07.2026) நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணியானது காங்கேசன்துறை பொலிஸ் அணியுடன் மோதியது.
பரபரப்பாக நடைபெற்ற இவ் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை தமதாக்கி கொண்டது.
இதனைத் தொடர்ந்து, நேற்றைய தினம் (06.07.2026) குறித்த அணியினர் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் வெற்றிக் கிண்ணத்தினை அரசாங்க அதிபரிடம் ஒப்படைத்தனர்.
இதன் போது அணியினரின் சாதனையை பாராட்டிய அரசாங்க அதிபர் எதிர்காலத்திலும் இவ்வாறான போட்டித் தொடர்களில் பங்குபற்றி வெற்றிகளைப் பெற வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன் மற்றும் உதவி மாவட்ட செயலாளர் செல்வி. உ.தர்ஷினி ஆகியோர் உடனிருந்தார்கள்.