15 வயதில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த வைபவ் சூர்யவன்ஷி:ஜாம்பவான் கிளைவ் லாயிட்

15 வயதே ஆன இளம் இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அச்சமற்ற, நேர்த்தியான அதிரடி ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இலங்கை ஏ அணிக்கு எதிரான முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில், வைபவ் வெறும் 11 பந்துகளில் அரைசதம் கடந்து ‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இப்போட்டியில் அவர் 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்து இந்தியா ஏ அணி சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

பயிற்சையாளர்கள் அவரது இயல்பான ஆட்டமுறையை மாற்ற முயற்சித்து, அவரது திறமையைக் கெடுத்துவிடக் கூடாது என்று லாயிட் அறிவுறுத்தியுள்ளார்.

இத்தொடரின் போது மைதானத்தில் ஏற்பட்ட ஒரு மோதல் சம்பவத்தைக் குறிப்பிட்ட லாயிட், இளம் வீரர்கள் எதிரணி வீரர்களுடன் நேரடியாக வம்பில் ஈடுபடாமல், நடுவர்களிடம் புகார் அளிக்க வேண்டும் என்றும், ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுபவர்களுக்கு நடுவர்கள் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் கூறினார்.

Related Posts