வட மாகாணத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெரும் போக அறுவடை நடைபெற்று வரும் நிலையில், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தொடர்ச்சியான மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக் குளத்தின் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குளத்தின் நீர்மட்டம் தற்போது 36 அடி 6 அங்குலமாக உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குளத்தின் 08 வான் கதவுகளும் தலா அரை அங்குலம் (1/2″) வீதம் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.