இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு இ.போ.ச துறைசார் தரப்பினருக்கு உறுதி வழங்கியதன் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கவிருந்த சேவை முடக்க போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் சிவபரன் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்தும், அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி தனியார் பேருந்துகளின் பாதுகாப்பான சேவையை உறுதி செய்வதற்காகவும் செவ்வாய்க்கிழமை வடக்கில் சேவை முடக்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்து இருந்தோம்.
ஆனால் தற்போது இ.போ.சபை, வடக்கின் ஆளுநர் மற்றும் துறைசார் தரப்பினர் இனி வரும் காலங்கலில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதென்று வழங்கிய உத்தரவாதத்துக்கு அமைய குறித்த போராடம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது என்றார்.