இளைஞர், யுவதிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள திருறைக்கலாமன்ற கலைத்தூது கலையரங்கில் யாழ் மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் ரி.ஈஸ்வரராஜா தலைமையில் 13 ஜனவரி 2013 அன்று நடைபெற்றது .
பாரளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி ஆகியோர் இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். யுஎஸ்எயிட் நிறுவன நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் டோன் கைடின், தேசிய இளைஞர் சேவை மன்ற பணிப்பாளர் நாயகம் லலித் பியும் பெரேரா ஆகியோர விசேட விருந்தினராகவும் கலந்து கொண்டார்கள்.
ரூபா 16 மில்லியன் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் யாழ் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 200 இளைஞர் கழகங்களுக்கு வழங்கப்பட்டன. அத்துடன் தேசிய ரீதியில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றிபெற்ற யாழ் மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தினை சேர்ந்த நெடுந்தீவு முகிலன் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டார். இளைஞர் சேவைகள் மன்ற இசை நடனக் கல்லூரியின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.



