Ad Widget

வேலணையில் மின்சாரம் இல்லாத பிரதேசங்களில் சூரிய மின்கலம் பொருத்தப்படும்

Solarவேலணை பிரதேசத்தில் மின்சாரம் இல்லாத இடங்களில் (சோலர்) சூரிய மின்கலம் பொருத்துவதற்காகவும் குடிநீர்ப்பிரச்சினையை தீர்ப்பதற்காக கிணறுகள் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்றுவருவதாக வேலணை பிரதேச சபை தவிசாளர் சி.சிவராசா தெரிவித்தார்.  

ஆளுநரிடம் கோரப்பட்டதற்கு அமைவாக வேலனையில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கமைவாக, மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து வேலணைப் பகுதியில் துறையூர், அம்பிகைநகர், மண்டைதீவு, புங்குடுதீவு,சாட்டி போன்ற இடங்களில் உள்ள இந்து மயானங்களுக்கு எரிகொட்டகைகள், மடங்கள் என்பன புனரமைக்கப்படுகின்றன.

இத்துடன் வேலணை பிரதேச சபையின் உப அலுவலகங்கள் மண்டைதீவு, அல்லைப்பிட்டி, வேலணை புங்குடுதீவு, நயினாதீவு ஆகியவையும் புனரமைப்புச் செய்யப்படவுள்ளன.

வேலணை, சாட்டி போன்ற இடங்களில் கிணறுகள் அமைப்பதற்கான வேலைத்திட்டங்களும் நடைபெற்று வருகின்றதாக  அவர் மேலும் கூறினார்.

Related Posts