Ad Widget

வாகனம் வேண்டாம்; ஊதியம், எரிபொருள் கொடுப்பனவுகள் பொதுப் பணிகளுக்கு – முதல்வர் மணிவண்ணன்

மாநகர முதல்வருக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாகனம் தேவையில்லை என்று யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன், சபையின் ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.

அத்தோடு தனது மாதாந்த ஊதியம், எரிபொருள் கொடுப்பனவை வழங்குமாறு கேட்டுள்ள அவர், அதனை சபையின் பொதுப் பணிகளுக்கு செலவிட திட்டங்களை வகுக்குமாறு கேட்டுள்ளார்.

தனது 37ஆவது வயதில் யாழ்ப்பாணம் மாநகரின் பிதாவாக பதவி ஏற்ற அவர், இளவயதில் பதவி வகித்த பெருமையைப் பெற்றார்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சபையால் இதுவரை காலம் முதல்வருக்கு வழங்கப்பட்டு வந்த வாகனத்தை பெற்றுக்கொள்ளவில்லை என்று அறிவித்துள்ள சட்டத்தரணி வி.மணிவண்ணன், ஊதியம், எரிபொருளுக்கான கொடுப்பனவைப் பெற்று சபையினால் முன்னெடுக்கப்படும் பொதுப் பணிகளுக்கு செலவிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான திட்டங்களை வகுக்குமாறு யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகாரி அவர் கேட்டுள்ளார்.

இதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளருக்கு தனது நிலைப்பாட்டை அவர் தெரியப்படுத்தினார்.

Related Posts