Ad Widget

வடக்கில் மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்ய நீதிமன்றங்களில் முன்னிலையாக மூத்த அரச சட்டவாதிகளுக்கு சட்ட மா அதிபர் பணிப்பு!

வடக்கு மாகாணத்தில் இந்த வாரம் நடத்தத் திட்டமிட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மாவீரர் நாள் நிகழ்வுகளை நிறுத்துவதற்கு நீதிவான் நீதிமன்றங்களில் முன்னிலையாகி உண்மைகளை வெளிப்படுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, சட்ட மா அதிபர் திணைக்கள மூத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இந்தத் தகவலை சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்புச் செயலாளர், அரச சட்டவாதி நிஷாரா ஜெயரத்ன தெரிவித்தார்.

இந்த வாரம் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நிறுத்துமாறு நீதிவான் நீதிமன்றங்களுக்கு முன் உண்மைகளை சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்கள மூத்த அதிகாரிகளுக்கு சட்ட மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரை நினைவுகூரல் தொடர்பான தடை உத்தரவுகளை கட்டுப்படுத்துவதற்காக தாக்கல் செய்யப்பட்ட நான்கு மனுக்களை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கடந்த வாரம் நிராகரித்தது.

பொலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டுள்ள தடைகளையும் மீறி நவம்பர் 25, 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் வடக்கு மாகாணத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார் மற்றும் வவுனியா நீதிவான் நீதிமன்றங்கள் முன்னதாக நினைவுகூரல்களுக்கு எதிராக தடை உத்தரவுகளை பிறப்பித்தன.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றங்களில் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இன்று சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

அதிகாரிகள் குழு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றிலும் தயாராக இருந்தது. எனினும், பலத்த மழை காரணமாக விமானம் மூலம் அங்கு செல்ல ஏற்பட்ட சிரமங்களால் அவர்கள் நாளை யாழ்ப்பாணம் நீதிமன்றில் சமர்ப்பணத்தை முன்வைப்பார்கள்” என்று அரச சட்டவாதி நிஷாரா ஜெயரத்ன தெரிவித்தார்.

Related Posts