யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் இணைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள், வியாபார நிலையங்களில் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் பரிசோதனை – விழிப்பூட்டல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

வெற்றுகாணிகளில் அந்த காணி உரிமையாளர்களால் முறைப்படி பற்றைகளை வெட்டி அகற்றி அதற்கு மேலாக அங்கு காணப்படுகின்ற சிரட்டைகள், பிளாஸ்டிக் கொள்கலன் போன்றவற்றை அகற்றுவது பிரதானமானதாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று வீடுகளிலும் நீர் வழிந்தோடும் பகுதிகளை அடிக்கடி துப்பரவு செய்ய வேண்டிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
தற்பொழுது கோவிட் -19 நோய்ப் பரவலுக்கு இணையாக இந்த டெங்கு பரவலும் நாட்டில் அதிகரித்துக் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதேச செயலர்கள், சுகாதார மருத்துவ அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த பரிசோதனைகளை முன்னெடுத்தனர்.