தனிமைப்படுத்தப்பட்ட பிரிவாக மாற்றப்பட்ட ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலை!

தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரானில் வேகமாக பரவி வரும் கொவிட் 19 என்ற கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அங்கிருந்து இலங்கைக்கு வருபவர்களை ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தி சோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலை தனிமைப்படுத்தப்பட்ட பிரிவாக மாற்றப்பட்டுள்ளது.

குறித்த நாடுகளிலிருந்து நாட்டுக்கு வரும் அனைத்து பயணிகளையும் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கவும் சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் கூடிய COVID-19 தொடர்பான தேசிய நடவடிக்கைக் குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related Posts