யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத் தலைவர் விஜயம்!!

யாழ்ப்பாண விமான நிலையத்தின் தற்போதைய நிலை மற்றும் அடுத்தகட்ட மேம்பாட்டு திட்டங்கள் விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை ஆராயும் நோக்கில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி AASL மற்றும் அவரது குழுவினர் நேற்று (26) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தனர்.

இந்த பயணத்தின் போது, விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்ததுடன் நிலுவையில் உள்ள திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க சந்திரசிறி வழிகாட்டுதலை வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணம் விமான நடவடிக்கைகளைத் மேலும் தொடங்குவதன் மூலம், வட மாகாணத்தில் இருந்து தென்னிந்தியவுக்கான விமான பயணத் தேவைகளின் வளர்ச்சி செய்யப்படும் என்றும், சமீபத்திய உள்நாட்டு இணைப்புடன் எதிர்காலத்தில் சர்வதேச பயண மற்றும் சுற்றுலா சந்தை வளரும் என தெரிவித்தார்.

இதேவேளை யாழ்ப்பாணம் விமான நிலைய அடுத்தகட்ட அபிவிருத்தி பணிகளுக்கு இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாவை வழங்க உடன்பட்டுள்ளது. இதன்மூலம் சிறிய பொதிகளை கையாளும் கட்டமைப்பு light baggage handling, முனையப் பகுதி terminal modification, வெளியேறும் நிர்வாக கட்டமைப்பு , நீர் விநியோகம், கழிவு நீர் அகற்றும் கட்டமைப்பு மற்றும் திண்ம கழிவு வெளியேற்றுவதற்கான கட்டமைப்பு ஆகியன அதன் கீழ் அமைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது

Related Posts