வவுனியா கோர விபத்து: வாகனங்களுக்கு தீ வைத்ததில் வான் சாரதி தீயில் எரிந்து உயிரிழப்பு!

வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் நால்வர் உயிரிழந்த நிலையில் வான் சாரதி தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இடம்பெற்றதன் பின்னர் பேருந்த மற்றும் வானுக்கு தீ அங்கிருந்த சிலரால் தீ வைக்கப்பட்ட நிலையில் அந்த தீயில் அகப்பட்டு வான் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதியின் சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பேருந்துக்கு சிலர் தீ வைத்துள்ள நிலையில் விபத்துக்குள்ளான வானும் தீயில் எரிந்துள்ளது. இதன்போது வான் சாரதியும் தீ வித்தில் அகப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வானுமே நேருக்கு நேர் மோதியுள்ளது.

இதன்போது அங்கிருந்தவர்களால் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட போது விபத்துக்குள்ளாகிய வானும் தீயில் எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தார்கள் அம்பியூலன்ஸ்களில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் நால்வர் நால்வல் உயிரிழந்துள்ள நிலையில் 20 பேர் காயமடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.

தீப்பற்றிய வாகனங்கள் தீயணைப்பு படையினரால் அணைக்கப்பட்டுவரும் நிலையில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts