நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை மறித்து சரமாரி வாள்வெட்டு!

நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்த்தானின் வாகனத்தை வழிமறித்த இனந்தெரியாத நபர்கள், சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடாத்திய நிலையில், மயிரிழையில் நாடாளுமன்ற உறுப்பினர் உயிர் தப்பியிருக்கின்றார்.

வவுனியா பாவக்குளம் பகுதியில் மக்கள் சந்திப்புக்களை முடித்து வவுனியா நோக்கி பயணித்தவேளை, அப்பகுதியில் நின்ற சிலர் வாள்களால் நாடாளுமன்ற உறுப்பினரை தாக்க முயற்சித்துள்ளனர். இதன்போது சுதாகரித்துக்கொண்ட பாதுகாவலர்கள் தாக்குதல் முயற்சியை தடுக்க முற்பட்டபோது பாதுகாவலரின் கைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் தாக்க முற்பட்டவர்கள் தப்பியோடிய நிலையில், காயமடைந்த பாதுகாவலர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts