வடக்கு ஆளுநராக பிஎம்எஸ் சாள்ஸை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல்!

வடக்கு மாகாண ஆளுநராக, சுகாதார அமைச்சின் செயலராக உள்ள PMS சாள்சை நியமிப்பதற்கான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இலங்கை நிர்வாக சேவை அலுவலகர் ஒருவரை அவரது சேவைக்கான வரப்பிரசாதங்களுடன் ஆளுநர் பதவிக்கு நியமிப்பதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அமைச்சரவை இந்த ஒப்புதலை வழங்கியது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்று மாலை கூடிய அமைச்சரவையில் இலங்கை நிர்வாக சேவையில் மூத்த அதிகாரியான பிஎம்எஸ் சாள்சை நியமிப்பதற்கான முன்மொழி முன்வைக்கப்பட்டது.

அதன்போதே அமைச்சரவை இந்த ஒப்புதலை வழங்கியது.

இதன்மூலம் வடக்கு மாகாண ஆளுநராக சாள்ஸ் நியமிக்கப்படுவதுடன், அவர் இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாக தொடர்ந்து சேவையில் இருப்பார்

Related Posts