Ad Widget

93 சதவீதமான பாலியல் குற்ற வழக்குகளுக்கு தீர்வு

கடந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் பதிவு செய்யப்பட்ட பாலியல் துஷ்பிரயோக சம்பங்களில் சுமார் 93 சதவீதமானவைக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. ருவான் குணசேகர தெரிவித்தார்.

கடந்த ஆண்டின் முதல் 11 மாதங்களுக்குள் மட்டும் 1,850 பாலியல் குற்றங்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவற்றுள் 93 சதவீதமானவை அதாவது 1,717 வழக்குகளுக்கு தகுந்த தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளதுடன் ஏனையவை தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவற்றுள் 1,501 குற்றங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் 16 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள். அவற்றுள் 1,209 மானவர்கள் தாங்களாகவே விரும்பி உறவுகளை வைத்துக் கொண்டவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆயினும் 16 வயதுக்கு குறைந்த பெண்ணொருவருடன் விரும்பியோ விரும்பாமலோ பாலியல் ரீதியான உறவினை வைத்துக் கொள்வது தண்டனைக்குரியதொரு குற்றமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts