. மல்லாகம் துப்பாக்கிச் சூடு – Jaffna Journal

மல்லாக இளைஞர் கொலை வழக்கு : பொலிஸாருக்கு நீதிவான் எச்சரிக்கை!!

மல்­லா­கத்­தில் இளை­ஞர் ஒரு­வ­ரைச் சுட்­டுக்­கொன்ற பொலிஸ் நப­ரைத் தெல்­லிப்­ப­ழைப் பொலி­ஸார் கைது செய்­யாது தவிர்ப்­பது தொடர்­பா­கச் சுட்­டிக்­காட்டி விசா­ர­ணை­யில் திருப்­தி­யில்லை என்று எதி­ராளி தரப்பு வழக்­கு­ரை­ஞர்­கள் தெரிவித்­ததை அடுத்து உரி­ய­மு­றை­யில் விசா­ரிக்­கத் தவ­றி­னால் வேறு பொலிஸ் நிலை­யம் ஊடாக வழக்கை விசா­ரிப்­பது குறித்­துப் பரி­சீ­லிக்­க... Read more »

மல்லாகம் துப்பாக்கிச்சூடு: 40 பேரை இலக்குவைத்து தேடுதல் வேட்டை!

மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸார் அப்பகுதியில் பரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்றபோது கலகத்தில் ஈடுபட்ட 40 பேரை இலக்குவைத்தே இத்தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மல்லாகம் சகாயமாதா ஆலயத்தின்... Read more »

சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்படவில்லை!

மல்லாகம் இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்வதற்கான உத்தரவை நீதிவான் வழங்கவில்லை. அவர் பணியில் ஈடுபடுகின்றார்” இவ்வாறு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் தெல்லிப்பளைப் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் – கே.கே.எஸ் வீதியில்... Read more »

15 நிமிடங்களுக்குள் இளைஞனை வைத்தியசாலையில் சேர்த்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும்!

“பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் முதுகுப் பகுதியால் பாய்ந்த குண்டு இடது பக்க நெஞ்சுப் பகுதியால் வெளியே வந்துள்ளது. மற்றொரு குண்டு தோள்மூட்டுப் பகுதியால் சென்றுள்ளது. 15 நிமிடங்களுக்குள் அவரை வைத்தியசாலையில் சேர்ப்பித்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும்” இவ்வாறு சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில்... Read more »

மல்லாகம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் ஒப்படைப்பு!

மல்லாகத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின் நேற்று இரவு (திங்கட்கிழமை) 7.15 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மல்லாகம், குளமங்கால் பகுதியைச் சேர்ந்த 28 வயதான பாக்கியராசா சுதர்சன் என்ற இளைஞனின் சடலமே உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா... Read more »

மல்லாகம் துப்பாக்கிச் சூடு: விசேட பொலிஸ் குழு விசாரணை

யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். தற்போது விசேட பொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு... Read more »

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நேரடி விசாரணை!!

மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக, யாழ்ப்பாணம் மாவட்ட மனித உரிமை ஆணையாளர் கனகராஜ் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு நேரடியாகச் சென்று விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பா.சுதர்சனின் உறவினர்களிடமும், சம்பவத்தை நேரில் கண்ட சிலரிடமும் அவர்கள் விசாரணைகளில்... Read more »

மல்லாகம் துப்பாக்கிச் சூடு- நீதிமன்றம், மருத்துவமனையில் குழப்பம்!!

மல்­லா­கத்­தில் இளை­ஞர் உயி­ரி­ழக்க கார­ண­மான துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய பொலிஸ் அதி­காரி இன்னமும் நீதிமன்றில் முற்படுத்தப்படவில்லை. மல்லாகம் சகாய மாதா ஆலயத்துக்கு முன்பாக நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த பா.சுதர்சன் என்ற இளைஞன் உயிரிழந்தான். இந்தச்... Read more »

மல்லாகம் துப்பாக்கிச்சூடு: ஐவர் கைது

மல்லாகத்தில் நேற்று இரவு ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் ஐந்து பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மல்லாகம் பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் திருவிழாவில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச்... Read more »

மல்லாகம் துப்பாக்கிச் சூடு: நடந்தது என்ன?

மல்லாகம் சகாய மாதா ஆலயத்தில் பெருநாள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ஒருவரால் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. ஆலயத்துக்கு வந்த இளைஞன், அவரை மீட்டு குழப்பத்தை தடுக்க முற்பட்ட போது, பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் குழப்பத்தை தடுக்க முயன்ற இளைஞர் உயிரிழந்தார்.... Read more »