. மன்னார் மனித புதைகுழி – Jaffna Journal

மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 500 ஆண்டுகள் பழமையானவையாம்!!

மன்னார் நகர நுழைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் 300 தொடக்கம் 500 ஆண்டுகள் முற்பட்டவை என்று காபன் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாதிரிகளின் அறிக்கையில் 1499 தொடக்கம் 1719ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் புதைக்கப்பட்ட மனித உடலங்களின் எச்சங்களே இவை என்று... Read more »

மன்னார் மனித புதை குழியிலிருந்து 21 சிறுவர்களின் எலும்புக் கூடுகள் மீட்பு!!

மன்னார் மனித புதை குழியிலிருந்து இது வரை 21 சிறுவர்களுடைய மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அகழ்வுப் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். இந்தப் புதை குழியில் இருந்து இதுவரை 276 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.... Read more »

இரும்புக்கம்பியால் கால்கள் கட்டப்பட்டு கொலை செய்து புதைக்கப்பட்ட மனித எச்சம் மீட்பு

கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் வகையில் மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து மனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. மன்னார் சதோச வளாகத்தில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் 112ஆவது நாளாக நேற்று வியாழக்கிழமை சட்ட மருத்துவ... Read more »

மன்னார் மனித புதைகுழி- ஜேர்மன் தூதுவர் நேரடி விஜயம்!

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளை இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜார்ன் ரோட் நேரடியாக சென்று அவதானித்துள்ளார். பலத்த மழை காரணமாகவும், அரச பணி காரணமாகவும், மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ வெளிநாடு சென்றதாலும் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடை... Read more »

மன்னார் சதொச வளாகத்தில் இதுவரை 207 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணியில் இதுவரை 207 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பிரதேசத்தில் நேற்று (திங்கட்கிழமை) 96 ஆவது தடவையாக மனித எலும்புக்கூடுகள் அகழும் பணிகள் இடம்பெற்றன. தற்போது வரைக்கும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என சுமார்... Read more »

மன்னாரில் மீட்கப்பட்ட எச்சங்களை அமெரிக்காவிற்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி

மன்னார் சதொச கட்டட வளாகத்திலுள்ள மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களை ஆய்வுக்குட்படுத்துவதற்காக, அவற்றை அமெரிக்காவிற்கு அனுப்பிவைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மீட்கப்பட்ட மனித எச்சங்கள் எந்த காலப்பகுதிக்குரியது என்பதை ஆய்வு செய்வதற்கான காபன் சோதனைக்காக அவை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளை... Read more »

மன்னார் மனித புதைகுழியில் 17 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்!

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 17 எழும்புக்கூடுகள் சிறுவர்களுடையதென தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் சதொச வளாகத்தில் காணப்படும் மனித புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் தற்காலிகமான நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றுமுதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மனித புதைகுழியின் 30 வீதமான பகுதியில் நடத்தப்பட்டுள்ள அகழ்வின்போது 148... Read more »

மன்னார் அகழ்வுப் பணிகள் 75ஆவது நாளாகவும் நீடிப்பு!

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில் இன்று 75ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் இடம்பெறுகின்றன. மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜாவின் மேற்பார்வையில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், அகழ்வுப் பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் இன்றைய தினம் மேலதிக பணியாளர்கள்... Read more »

மன்னாரில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் மேலும் சில எலும்புக்கூடுகள் மீட்பு!

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வு நடவடிக்கைகளில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கும் வகையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. 72 ஆவது நாளாக நேற்று (திங்கட்கிழமை) மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீட்கப்படும் மனித... Read more »

மன்னர் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு – கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டனவா?

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் தொடர்சியாக மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக போராசிரியர் தலைமையில் மன்னார் ‘சதொச’ வளாகத்தில்... Read more »

மன்னாரில் மனித எலும்புக்கூட்டு அகழ்வு பணி நிறுத்தம்

மன்னார் சதோச வளாகத்தில் தொடர்சியாக இடம் பெற்று வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணி நேற்று (திங்கட்கிழமை) எவ்வித அறிவித்தல்களும் இன்றி நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வரை 67 தடவைகள் அகழ்வுகள் இடம் பெற்றது. இந்நிலையில் சனி மற்றும் ஞாயிறு... Read more »

மன்னார் மனித புதைக்குழிக்குள் இருந்து வெட்டுத் தழும்புடன் மண்டையோடு!

மன்னாரில் தொடர்ந்து 66ஆவது நாளாக மனித எச்சங்களின் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அங்கிருந்து வெட்டு தழுப்புகளுடனான மண்டை ஓடொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த மனித புதைக்குழி பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ள நிலையில், தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எச்சமானது இச்சந்தேகங்களை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளன.... Read more »