. September 11, 2020 – Jaffna Journal

மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதை கண்டித்து நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டம்

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அமைந்துள்ள சிந்துபாத்தி இந்து மயானத்தில் மருத்துவக்கழிவுகள் கொண்டப்படுவதனை கண்டித்து நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டம். குறித்த மயானத்தில் பாரிய கிடங்கு வெட்டி அதனுள் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட அதன் மேல் உக்கக்கூடிய கழிவுகளை... Read more »

யாழில் பாரிய வெடிப்பு சத்தம்!! – காரணம் வெளியானது

யாழ்ப்பாணம் அராலி இராணுவ முகாம் பகுதியில் பயன்பாட்டிற்கு உதவாத வெடிப்பொருட்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கை இன்று(வெள்ளிக்கிழமை) முன்னெடுப்பட்டுள்ளது. இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக பொதுமக்கள் இவ்விடயம் குறித்து அச்சமடையதேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more »

பதவியை இராஜினாமா செய்தார் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தன் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் தனது பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அந்த வகையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்... Read more »

குருந்தூர் மலை ஐயன் கோவிலில் நிறுவப்பட்டிருந்த திரிசூலம் உடைக்கப்பட்டுள்ளது!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள, தமிழர்களின் பூரவீக குருந்தூர் மலை ஐயன் கோவிலில் நிறுவப்பட்டிருந்த திரிசூலம் அண்மையில் விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அப் பகுதி மக்களால் இதுதொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, அவர் நேற்று (வியாழக்கிழமை) குமுழமுனைப்... Read more »

புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

புத்த பெருமானின் உருவம் பொறித்த சேலையை அணிந்து, கொழும்பு – நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வந்த பெண் ஒருவர் நாரஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 62 வயதுடைய , உப்புக் குளம் வடக்கு, மன்னார் பகுதியைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார்... Read more »

அரச காணியில் குடியிருப்போருக்கு நிரந்த காணிப்பத்திரம்!!

ஆவணங்கள் எவையுமின்றி அரச காணிகளை அபிவிருத்தி செய்து அல்லது அவற்றில் குடியிருந்துவரும் மக்களுக்கு அக்காணிகளுக்கான சட்ட ரீதியான ஆவணங்களை வழங்குவது தொடர்பான அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை கம்பஹா மற்றும் கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிப்பதற்குரிய... Read more »

யாழ்.மாநகரில் வீடொன்றுக்குள் புகுந்து கும்பல் அட்டூழியம்!!

யாழ்ப்பாணம் மாநகரில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டை தீயிட்டு எரியூட்டி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. சுண்டுக்குளி குருசர் வீதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த அட்டூழியம் இன்று அதிகாலை 1.40 மணியளவில் இடம்பெற்றது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.... Read more »

பங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களை விடுவிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

பங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அம்பாலாங்கொடை பிரதேச கடற்றொழிலாளர்கள் 24 பேரும் விரைவில் நாடு திரும்புவார்கள் என்று நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார். கடந்த பெப்ரவரி 05 ஆம் திகதி நான்கு பல நாள் மீன்பிடி கலங்களில்... Read more »

சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே தற்கொலைகளை தடுக்க முடியும் –வைத்தியர் யமுனா நந்தா

சமூக மட்டத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலமே வடபகுதியில் தற்கொலைகளை தடுக்க முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி. யமுனா நந்தா தெரிவித்தார் உலக தற்கொலை தடுப்பு தினம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து... Read more »