. August 2020 – Jaffna Journal

அதிக வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுரை

நாட்டின் தற்போது நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலையிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. அதிக வெப்பம் காரணமாக சரும நோய்கள் உள்பட உடல் வறட்சி போன்ற நிலமைகளுக்கு மக்கள் முகங்கொடுக்க நேரிடும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின்... Read more »

O/L பரீட்சைக்கான விண்ணப்ப இறுதித் திகதி இன்று!!

2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை இன்றுடன் (ஓகஸ்ட் 31) நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான http://onlineexams.gov.lk/onlineapps ஊடாக தமது விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. பாடசாலை பரீட்சார்த்திகள்... Read more »

போரால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தியாகி அறக்கொடையால் வீடு கையளிப்பு!!

போரால் பாதிக்கப்பட்டு குடிசை வீடொன்றில் வசித்த புங்குடுதீவைச் சேர்ந்த குடும்பம் ஒன்றுக்கு புதிதாக அமைக்கப்பட்ட கல் வீடு இன்று கையளிக்கப்பட்டது. தியாகி அறக்கொடை நிதியத்தின் நிதிப் பங்களிப்புடன் இராணுவத்தினரின் கட்டட பொறியல் பிரிவால் இந்த வீடு அமைக்கப்பட்டது. தியாகி அறக்கொடையின் இயக்குனர் தியாகேந்திரன், யாழ்ப்பாணம்... Read more »

இலங்கையில் 19- 25 வயதுக்கிடைப்பட்ட இளைஞர்களில் எயிட்ஸ் தொற்று அதிகரிப்பு!!

இலங்கையில் 19- 25 வயதுக்கிடைப்பட்ட இளைஞர்கள் அதிகம் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். நாடுபூராகவும் உள்ள தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு பிரிவின்... Read more »

யாழில் மனித உரிமைகள் ஆணைகுழுவில் மகஜரை கையளித்த உறவுகள்!!

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற பேரணியை அடுத்து வடகிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினாரால் மனித உரிமைகள் ஆணைகுழுவிற்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமானநேற்று, காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களார் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது... Read more »

இலங்கையில் நேற்று மாத்திரம் 17 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாத்திரம் 17... Read more »

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் நடந்தது என்ன?

இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கத்தை பதவியிலிருந்து அகற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட விடாமல் எம்.ஏ.சுமந்திரன் காப்பாற்ற, இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் பெரும் இழுபறியில் முடிந்தது. செயலாளர் கி.துரைராசசிங்கம் தேசியப்பட்டியல் நியமனத்தில் நடந்து கொண்ட விதம் பிழையானது. அவருக்கு எதிரான... Read more »

மணிவண்ணன் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் நீக்கம்?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணனை தற்காலிகமாக நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்தியகுழு கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிய வருகிறது. எனினும், கட்சி இதுவரை உத்தியோகபூர்வமாக இதனை அறிவிக்கவில்லை.... Read more »

மண்டைதீவில் தனியார் காணியில் இராணுவ முகாம் அமைக்க முயற்சி!!

யாழ்ப்பாணம் மண்டைதீவில் உள்ள கடற்படை முகாமுக்கு மேலதிகமாக தனியார் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில், நிலஅளவைத் திணைக்களத்தினர் இன்று (28) காணிகளை அளவிடுவதற்கு வந்த போது, அப்பகுதி மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பை வெளியிட்டனர். இதனை அடுத்து நில அளவையை நிறுத்திவிட்டு அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.... Read more »

க.பொ.த. சாதாரணதர பரீட்சை ஜனவரியில்!!

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர பரீட்சை நடைபெறும் திகதி அறிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை க.பொ.த. சாதாரணதர பரீட்சை நடாத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் மூன்றாம்... Read more »

யாழ் மாவட்டத்தில் இன்று அதிகளவான வெப்பநிலை பதிவாகும்!

யாழ்.மாவட்டத்தில் இன்று அதிகளவான வெப்பநிலை பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறும் வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சூரியனின் தென் திசை நோக்கிய நகர்வு காரணமாக குறித்த நிலைமை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று தொடக்கம்... Read more »

விடுதலைப் புலிகளிடம் யாழ்ப்பாணம் வீழ்ச்சியடையும் தருணத்தில் அதனைத் தடுக்க பாக்கிஸ்தான் உதவியது!!

யாழ்ப்பாணத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றும் நிலை ஏற்பட்ட போது அதனை தடுக்க பாகிஸ்தான் ராணுவம் உதவியது என இலங்கை வெளியுறவுத் துறை செயலாளரும், முன்னாள் கடற்படைத் தளபதியுமான, பேராசிரியர் கலாநிதி ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ஸ பொறுப்பேற்றபின், பாதுகாப்புத்... Read more »

யாழில் சமுர்த்தி பெண் அலுவலர் அநாகரிகமாக திட்டியதால் குடும்பஸ்தர் தற்கொலையென உறவினர்கள் முறைப்பாடு!

யாழ்ப்பாணத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரை மாய்த்தமைக்கு சமுர்த்தி அலுவலகத்தினதும், சமுர்த்தி உத்தியோகத்தரதும் செயற்பாடுமே காரணம் என குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர். குறிப்பாக, அலுவலகத்தில் வைத்து பெண் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் அவரை அவமரியாதையாக திட்டியதாக குறிப்பிடப்படுகிறது. சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் இந்த... Read more »

செல்வச் சந்நிதி முருகனின் திருவிழாவில் காவடி, அங்கப்பிரதட்சணம், கற்பூரச் சட்டி எடுக்கத் தடை

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத் திருவிழாவில் அங்கப்பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அறிவித்துள்ளது. இதனால் நேற்றையதினம் வியாழக்கிழமை ஆலயத்துக்கு வருகை... Read more »

ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் ஆறுபேர் கைது!

ஆவா என அழைக்கப்படும் வினோதன் உள்பட 6 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். பிறந்தாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக 12 பியர் ரின்களுடன் சென்று கொண்டிருந்த போது சந்தேக நபர்கள் 6 பேரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன்... Read more »

யாழ் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்!!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா இன்று 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். பல்கலைக் கழகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற சமய வழிபாடுகளைத் தொடரந்து, பல்கலைக்கழகப்... Read more »

ராஜிவ்வை கொன்றது புலிகளே; யுத்த வலயத்திலிருந்து மக்களை வெளியேற்ற பிரபாகரன் மறுத்து விட்டார்: எரிக் சொல்ஹெய்ம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை விடுதலைப் புலிகளே கொலை செய்தார்கள் என அந்த அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்ததாக, இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அவரது ருவிற்றர் பதிவொன்றில் நடந்த உரையாடலில் இதனை தெரிவித்துள்ளார்.... Read more »

இந்தியாவில் தீவிரமாகி வரும் கொரோனா பரவலால் இலங்கைக்கும் ஆபத்து என எச்சரிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதால் இலங்கையிலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று காலை 10.00 மணி முதல் இன்று காலை வரை நாட்டில் மேலும் 13 கொரோனா நோய் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக... Read more »

மணிவண்ணன் சார்பானோரை பதவி துறக்க முன்னணி அழுத்தம்!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் உள்ளூராட்சி சபைகளுக்கு நியமனம் பெற்ற உறுப்பினர்களில் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்படுபவர்களை பதவி விலகுமாறு அந்தக் கட்சியால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. உள்ளூராட்சி சபைகளுக்கு விகிதாசார அடிப்படையில் கிடைக்கப்பெற்ற ஆசனங்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நியமிக்கப்பட்டவர்களுக்கு... Read more »

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

யாழ்ப்பாண பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகருக்கும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கும் இடையில் நேற்று முன்தினம்... Read more »