. July 2020 – Jaffna Journal

யாழ். போதனா 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற 70 நோயாளிகள் சுயதனிமைப்படுத்தலில்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர் 7ஆம் விடுதியின் மலசல கூடத்தைப் பயத்தியமை மற்றும் சிற்றுண்டிச் சாலைக்குச்... Read more »

தமிழ் மக்களுடைய பிரச்சனையை ஆட்சியாளர்களால் கடந்து போக முடியாது – சுமந்திரன்!

தமிழ் மக்களுடைய பிரச்சனையை ஆட்சியாளர்களால் கடந்து போக முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எம் மக்கள் தொடர்ச்சியாக ஒரே அரசியல் நிலைப்பாட்டுக்கு வாக்களித்துக் கொண்டிருப்பதனாலேயே ஆட்சியாளர்களால் அதனைக் கடந்து போக முடியவில்லை என்றும் கூறினார்.... Read more »

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வரலாற்றில் மூன்று குழந்தைகள் பிரசவிப்பு

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரே சூலில் உருவான மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி பகுதியினைச் சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியை ஒருவருக்கே இவ்வாறு மூன்று குழந்தைகள் கிடைக்கபெற்றுள்ளன. இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இவ்வாறு... Read more »

சுமந்திரன் குட்டி இராணுவ ஆட்சியை நடத்துகிறார்- சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு

சுமந்திரன், குட்டி இராணுவ ஆட்சியை நடத்துவதாக வடமாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார். திருகோணமலை, மூன்றாம் கட்டைப் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “சுமந்திரனைச் சூழ 20 விசேட அதிரடிப்... Read more »

எங்கள் இனத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் – வி.மணிவண்ணன்

எங்கள் இனத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என போராடி வருகின்றோம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலே எதிர்காலத்தில் எம்மினத்தின் மீது புரியப்படும் குற்றங்களை தடுக்க முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன்... Read more »

அனலைதீவு ஐயனார் ஆலய அன்னதானம் வழங்கலை திடீரென நிறுத்தினர் சுகாதாரத் துறையினர்

வரலாற்றுச் சிறப்புமிக்க அனலைதீவு ஐயனார் ஆலயத்தில் வருடாந்த பெருவிழா இடம்பெற்று வரும் நிலையில் அங்கு அடியவர்களுக்கு வழங்கப்பட்ட அன்னதானம் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் நிறுத்தப்பட்டது. கோவிட் -19 நோய்த் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் கீழ் அன்னதானம் வழங்கல் நிறுத்தப்படவேண்டும் என்று ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ... Read more »

யாழ்ப்பாணம் தேர்தல்கள் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி!

வாக்களிப்பு, நிலையங்களில் கொரோனா பரவும் அபாயத்தை தடுப்பதற்கு சகல விதமான கட்டுப்பாட்டு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. இதுகுறித்த சுகாதார நடைமுறைகளை மற்றும் தேர்தல் தொடர்பான தகவலை யாழ்ப்பாணம் தேர்தல்கள் அலுவலகம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், 1. கட்டாயமாக முகக் கவசம் அணிதல் 2. கை கழுவும்... Read more »

இரா.சம்பந்தனுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்- திருமலை தமிழ் பொது அமைப்புகளின் ஒன்றியம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் புதியதொரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவுசெய்யுமாறு திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக தமிழ் பொது அமைப்புகளின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. திருகோணமலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த விடயம்... Read more »

வாள் வெட்டுத் தாக்குதலுக்கு தயாராக இருந்ததாக இளைஞர்கள் கூரிய அயுதங்களுடன் கைது!

வாள் வெட்டுத் தாக்குதலுக்கு தயாராக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள், நேற்று (புதன்கிழமை) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து கூரிய ஆயுதங்களும் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பிபாக தெரியவருவதாவது, கோப்பாய் பகுதியில்... Read more »

பாடசாலை ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சின் விளக்கம்.

பொதுத் தேர்தல் இடம்பெறும் வாரத்தினுள் நான்கு நாட்கள் இலங்கையில் அனைத்து அரச, தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த தரம் 1 உள்ளிட்ட அனைத்து தரங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி தொடக்கம்... Read more »

இளையோருக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க வேலை வங்கி உருவாக்குவேன் – வி.மணிவண்ணன்

இளையோருக்கான வேலைவாய்ப்புப் பிரச்சனைகளை இல்லாது ஒழிக்கும் முகமாக நாம் தேர்தலில் வெற்றி பெற்றதும், உடனடியாக வேலை வங்கி (job bank) ஒன்றினை உருவாக்குவேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். அச்சுவேலி... Read more »

யாழில் கணவரின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி படுகாயம்!

குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழும் மனைவியை அவர் வேலை செய்யும் வீட்டுக்குத் தேடிச் சென்ற கணவர், சித்திரவதையின் பின் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தியுள்ளார். படுகாயமடைந்த 2 பிள்ளைகளின் தாயார், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குப்பிளான் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம்... Read more »

விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்காக இந்தியாவிடம் இலங்கை வழங்கிய வாக்குறுதிகள் குறித்து சம்பந்தன் கேள்வி!

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்காக இந்தியாவின் உதவியை பெறும்போது இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் பின்நிற்பதாகவும் இதற்கு இந்தியா என்ன செய்யப்போகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பினார். மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்... Read more »

கொரோனா தொற்று காரணமாக வேலையிழந்தவர்கள் குறித்து கணக்கெடுப்பு

கொரோனா தொற்று காரணமாக வேலையிழந்தவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடாத்தப்படவுள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளி விரபத் திணைக்களம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. உற்பத்தி, வருமானம் மற்றும் கிருமிநாசினிகளுக்கான செலவுகள் மற்றும் பிற தொடர்புடைய செலவுகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பிற டாக்ஸி சேவைகளின் ஓட்டுநர்கள்... Read more »

தேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்

ஜனாதிபதி ஆட்சிமுறை, நாடாளுமன்ற தேர்தல் முறை மற்றும் தமிழ் மக்களின் தேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பிரசாரக்கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்றத்தில்... Read more »

முல்லைத்தீவில் விரைவில் பல்கலைக்கழம் வடக்கு ஆளுநர் தெரவிப்பு

பல்கலைக்கழக கல்வியை விரிவுபடுத்தும் நோக்கில் முல்லைத்தீவில் பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படவுள்ளதோடு அதற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு பிரத்தியேக முறை பின்பற்றப்படவுள்ளதாகவும் வடக்கு ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மன்னார் பரிகாரக்கண்டல் அரச தமிழ் கலவன் பாடசாலையின் தொழில்நுட்பக்... Read more »

அரச வேட்பாளரிற்கு வாக்களிக்க உத்தியோகத்தர்களை நிர்ப்பந்தித்த பிரதேச செயலாளர்!!

நடந்து முடிந்த தபால் வாக்களிப்பில் அரச கட்சி வேட்பாளரிற்கு வாக்களிக்கும்படி உத்தியோகத்தர்களை வற்புறுத்திய பிரதேச செயலாளர் குறித்து முறையிட தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகி வருகிறது. யாழ் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் ஒருவரே இந்த தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் எழுமாறாக 100 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனை – எவருக்கும் கோரோனா தொற்று இல்லை

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் எழுமாறாக 100 பேரின் உயிரியல் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்திய நிலையில் எவருக்கும் கோரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய 9 மாகாணங்களின் சுகாதாரத் திணைக்களங்களால் அடுத்த ஒரு வருடத்துக்கு... Read more »

யாழில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி தொடர்பாக யாழ். போதனா பணிப்பாளர் வெளியிட்ட கருத்து

யாழ்.போதனா வைத்தியாலையில் கடந்த 25 ஆம் திகதி 2 ஆவது தடவையாக அனுமதிக்கப்பட்டு 7 ஆம் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவருக்கு குறைந்தளவு தொற்றே ஏற்பட்டிருக்கிறது என்றும் அவருடன் பழகிய வைத்தியசாலை ஊழியர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டு... Read more »

பல மாவட்டங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை!!

நாட்டில் கடந்த நாட்களாக தொடரும் மழையுடனான வானிலைக் காரணமாக பல மாவட்டங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிளுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகராட்சியில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்... Read more »