. June 30, 2020 – Jaffna Journal

வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும்!

வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இராணுவத் தளபதி இவ்வாறு கூறியுள்ளார். “வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டிய தேவை இல்லை. தற்போதுள்ள... Read more »

யாழ் ல்கலைக்கழக மாணவர்களின் விடுதிகள் தொற்று நீக்கும் பணியில் இராணுவத்தினர்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதிகள் தொற்று நீக்கும் பணியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று காலை ஈடுபட்டனர். நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழங்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையிலேயே இந்தத் தொற்று நீக்கல் பணிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி கோண்டாவிலில்... Read more »

பாடசாலைகளில் மாணவர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் பற்றி மருத்துவ அதிகாரி விளக்கம்!

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிப்பதற்கு பாடசாலை மட்டத்தில் சிறப்பு சுகாதாரக் குழு நியமிக்கப்படவுள்ளது. இந்தத் தகவலை பாடசாலை சுகாதார மருத்துவ அதிகாரி நித்தியானந்தா தெரிவித்தார். கோவிட் – 19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக கடந்த 105 நாள்களாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த... Read more »

புதிய வகை வரைஸ் காய்ச்சல் சீனாவில் கண்டறிவு!!

ஒரு தொற்று நோயாக மாறக்கூடிய புதிய வகைக் காய்ச்சல் சீனாவில் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. “இந்தக் காய்ச்சல் சமீபத்தில் வெளிப்பட்டுள்ளது. பன்றிகளால் இந்த வைரஸ் பரவுகிறது. எனினும் ஆனால் மனிதர்களுக்கும் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக... Read more »

பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் வடக்கு ஆளுநர்

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பின் போது வடக்கு மக்களின் பல பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை... Read more »

உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பியவர் மீது உடன் நடவடிக்கை எடுங்கள் – மாவை அவசர கடிதம்

பொதுத் தேர்தலில் வேட்பாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விமலேஸ்வரி சிறீகாந்தரூபன் மற்றும் நால்வர் விடுவித்துள்ள அறிவிப்பு தமிழரசுக் கட்சிக்கும், வேட்பாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என அக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார். கட்சித் தலைமைக்குத் தெரிவிக்காமல் இத்தகைய செய்திகளைப் பரப்பியமைக்கு எதிராகச்... Read more »

யாழில் இளைஞர்களை மிரட்டி கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த மூவருக்கும் விளக்கமறியல்

யாழ்ப்பாணம் மாநகரில் வீதியால் செல்லும் இளைஞர்களை மிரட்டி அலைபேசிகளைக் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த மூவரையும் இன்று (செவ்வாய்க்கிழமை) வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் நாவலர் வீதி – கைலாசபிள்ளையார் கோவிலடி, கந்தர்மடம் சந்தி மற்றும் யாழ்ப்பாணம் இந்து மகளிர்... Read more »