. June 29, 2020 – Jaffna Journal

அனைத்துப் பாடசாலைகளும் இன்று முதல் கட்டமாக திறப்பு!

கொவிட்-19 தொற்று வைரஸ் பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த அனைத்துப் பாடசாலைகளும் இன்று (29), முதல் கட்டமாக திறக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாக ஊழியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்திருந்தது. இக்காலப் பகுதியில்... Read more »

முகக்கவசம் அணியாத 1,280 பேர் சுயதனிமைப்படுத்தலில்!!

மேல் மாகாணத்தில் முகக் கவசம் அணியாது பொது இடத்தில் நடமாடிய ஆயிரத்து 280 பேர் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் காணப்படும் நபர்கள் கட்டாயம் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்படுவார்கள் என்ற நடைமுறையை பொலிஸ் தலைமையகம்... Read more »

வாள்வெட்டுக் குழுக்களைக் கட்டுப்படுத்த இராணுவத்துக்கு அதிகாரம்!!

வடக்கு மாகாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையறு விளைவிக்கும் வகையில் வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களைக் கட்டுப்படுத்தவும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுக்கவும் இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு மேலதிகமாக இராணும் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினருக்கு... Read more »

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில், மேலும் 04 பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை(29.06.2020 காலை – 8.15) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,037 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,... Read more »

வட- கிழக்கில் 20 ஆசனங்களை கூட்டமைப்பு கைப்பற்றுவதற்கு உதவுவோம்- ஜனநாயகப் போராளிகள் கட்சி

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு- கிழக்கில் 20 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளும் வகையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோமென ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பி.கோணேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்... Read more »

இலங்கையில் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டமைக்கான காரணம் குறித்து ஜனாதிபதி விளக்கம்

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாக பூச்சியமாக காணப்பட்டமையினாலேயே ஊரடங்கை தளர்த்துவதற்கு தீர்மானித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் ஏற்பட்டதையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வந்தது. மே மாதம் வரையில்... Read more »