. June 15, 2020 – Jaffna Journal

நாவற்குழியில் சிறுமிக்கு கத்திக் குத்து!!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழியில் உறவினர்களுக்கு இடையிலான தகராறு கத்தி குத்தில் முடிவடைந்ததில் கத்திக்குத்துக்கு இலக்கான சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நாவற்குழி 300 வீட்டு திட்டம் பகுதியை சேர்ந்த துவாரகா (வயது 12) எனும் சிறுமியே படுகாயமடைந்துள்ளார். அந்தப் பகுதியில் உள்ள... Read more »

யாழில் பெண்களுடன் சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது தாக்குதல்!!

யாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் வீதியால் செல்லும் பெண்களுடன் சேட்டையில் ஈடுபட்டுவந்த இளைஞர்கள் நால்வர் நையப்புடைக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கலட்டி வீதியால் செல்லும் பெண்களுடன் தொடர்ச்சியாக சேட்டையில் ஈடுபட்டுவந்த இளைஞர்களின் தொல்லை தாங்காமல், பெண்கள் தமது உறவினர்களிடம் விடயத்தை தெரிவித்துள்ளனர். இந்நிலையில்... Read more »

யாழில் காற்றால் தூக்கி வீசப்பட்டவர் பலி!!

மோட்டார் சைக்கிளில் பயணித்த போது கடுமையான காற்றின் தாக்கம் காரணமாக தூக்கி வீசப்பட்ட முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். கோப்பாய் தெற்கு பகுதியினை சேர்ந்த சந்திரசேகர் சரவணமுத்து , வயது 80 என்ற முதியவரே... Read more »

உயர் தரத்தில் தொழில் கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரல்!!

உயர் தரத்தில் தொழில் கற்கை நெறியின் கீழ் தரம் 12க்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த கற்கை நெறிக்கு மாணவர்களை உள்வாங்கும் போது க.பொ.தராதர சாதாரண தரத்தில் சித்தியடைந்தமை அல்லது சித்திபெறத்தவறியமை கவனத்திற்கொள்ளப்படமாட்டாது. தாம் விரும்பும் பாடசாலையை தெரிவுசெய்துக்கொள்வதற்கான சந்தர்ப்பம் மாணவர்களுக்கு கிடைக்கின்றது.... Read more »

தபால் மூல மருந்து விநியோகம் தொடர்பான முக்கிய அறிவித்தல்!!

அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை (கிளினிக்) மருந்து மற்றும் அரச ஒசுசல மூலம் பெற்றுக்கொள்ளப்படும் மருந்து வகைகளின் உரிமைமயாளர்களுக்கு தபால் திணைக்கள அலுவலக பணியாளர் மூலம் விநியோகிக்கும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார். கொரோனா வைரசு தொற்றுக்கு மத்தியில்... Read more »

யாழில் கொரோனாவின் தாக்கத்தையடுத்து வேகமாகப் பரவும் காசநோய்!!

யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அச்சம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், காச நோய் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நோய்த் தொற்றுடையவர்கள் 90 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதுடன், மேலும்... Read more »

பிரிந்து நின்று எதையும் சாதிக்க முடியாது: வாக்குறுதிகளை நிறைவேற்ற எதையும் செய்வோம்- சுமந்திரன்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் பெரும்பான்மை பலத்தைப் பெற்ற ஒரே ஒரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே எனவும் தமிழ் மக்கள் பிரிந்து நின்றால் எதையும் சாதிக்க முடியாது என்றும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், 2015 ஆம் ஆண்டு... Read more »

தேர்தல் வியூகம் எப்படி அமைப்பது?- யாழில் கூடி ஆராய்ந்தது முன்னணி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ்ப்பாணம், இளம் கலைஞர் மன்ற மண்டபத்தில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்றது. குறித்த... Read more »