. June 12, 2020 – Jaffna Journal

தனியார் கல்வி நிறுவனங்களை மீள ஆரம்பித்தால் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்!!

தனியார் கல்வி நிலையங்களை நடாத்துவதற்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரனால் சிறப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தனியார் கல்வி நிலையங்களை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் பின்வரும் கோரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு... Read more »

யாழில் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்- யாழ்.இராணுவ கட்டளைத் தளபதி

யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானது என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். கரணவாய் வடக்கு கரவெட்டி கொற்றாவத்தையில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கான வீட்டிற்கான அடிக்கல் யாழ். மாவட்ட... Read more »

மிருசுவிலில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்: ஒருவர் காயம், நிறுவனமொன்றின் சொத்துக்கள் சேதம்!

யாழ்ப்பாணம், கொடிகாமம், மிருசுவில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது வாள்வெட்டுக் குழு ஒன்றினால் இரவுவேளையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் குறித்த நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்கானதுடன், நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தும் உடைத்து நாசம் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம்... Read more »

தொலைபேசி பழக்கத்தில் ஆண்களைச் சந்திக்கச் சென்ற பெண்களின் நிலை!!

யாழில் குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டார் எனக் கூறப்பட்ட பெண், நான்கு நாட்கள் கடந்த நிலையில் தன்னை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார்கள் என பருத்தித்துறைத் பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார். யாழ். சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த இரு பெண்களுக்கும் வடமராட்சிப் பகுதியைச்... Read more »

கல்வி அமைச்சின் தீர்மானத்தால் கடும் சிரமம் – இலங்கை ஆசிரியர் சங்கம்

பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறப்பதற்கு கல்வி அமைச்சு எடுத்திருக்கும் தீர்மானத்தால் பெற்றோரும் ஆசிரியர்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அத்துடன் பாடசாலை நிறைவடையும் நேரத்தில் மேற்கொண்டிருக்கும் திருத்தத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று (11.06.2020)... Read more »

மீசாலை புத்தூர்சந்தியில் வாள்வெட்டு : ஒருவர் காயம்

தென்மராட்சி, மீசாலை, புத்தூர்சந்தி பூதவராயர் ஆலய பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்றையதினம் (11.06.2020) இரவு 9 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் குறித்த வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். வாள்வெட்டில் காயமடைந்த நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில்... Read more »

யாழ்ப்பாணம், கம்பஹா மாவட்டங்களின் வாக்குச்சீட்டு மிக நீளமானது

யாழ்ப்பாணம் மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு அச்சிடப்படவேண்டிய வாக்குச்சீட்டுகள் மிக நீண்டதாக ( 23″) அமையும் என்று தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அத்துடன், வன்னி, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் திகாமடுல்ல மாவட்டங்களுக்கு அச்சிடப்படவேண்டிய வாக்குச்சீட்டுகள் அகலமாக (9″) அமையும் என்றும் செயலகம் குறிப்பிட்டுள்ளது. 18 உறுப்பினர்களைத்... Read more »

வடக்கு மாகாணத்தில் இளைஞர், யுவதிகளுக்கு பனை அபிவிருத்தி சபை ஊடாக வேலை வாய்ப்பு

பனை அபிவிருத்திச் சபையினை பல்வேறு வகையில் தரம் உயர்த்துவதற்குரிய வேலைப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பீ.ஏ.கிருசாந்த பத்திராஜா தெரிவித்தார். அத்துடன், வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு பனை அபிவிருத்தி சபை ஊடாக வேலை வாய்ப்பினை ஏற்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.... Read more »

வணக்கத் தலங்களில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் அறிவிப்பு!

வணக்கத் தலங்களில் பின்பற்றப்படவேண்டிய கொரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து இன்று வெள்ளிக்கிழமை முதல் வணக்கத் தலங்களில் சமய வழிபாடுகளை கடைப்பிடிக்க முடியும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,... Read more »