. June 8, 2020 – Jaffna Journal

எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுகின்றன

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுமார் இரண்டு மாத கால கொரோனா வைரஸ் விடுமுறையைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது. அந்தவகையில் மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவர்களுக்காக மட்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (15) மீண்டும் பல்கலைக்கழகங்கள் திறக்கபடும் என பல்கலைக்கழக மானியங்கள்... Read more »

யாழில் வாள்வெட்டு குழு தாக்குதல் – 3 பேர் படுகாயம்

யாழ்.கொடிகாமம், வெள்ளாம்கோக்கட்டி பகுதியில் வாள்வெட்டு குழு நடாத்திய தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வெனிஸ்ரன், வேலுப்பிள்ளை சுரேந்திரன் (53-வயது) மற்றும் வெள்ளாம்போக்கட்டியை சேர்ந்த மகேந்திரன் அஜந்தன் (23-வயது) ஆகியோர் காயமடைந்த... Read more »

யாழ். – கொழும்பு ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கான ரயில் சேவைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பிற்கான முதலாவது சேவை இன்று காலை 5.45 மணிக்கும் இரண்டாவது சேவை 9.45 மணிக்கும் ஆரம்பிக்கப்பட்டதாக யாழ்ப்பாண ரயில் நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும்... Read more »

யாழ்ப்பாணத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் இன்று ஆரம்பம்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் இணைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள், வியாபார நிலையங்களில் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் பரிசோதனை – விழிப்பூட்டல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். வெற்றுகாணிகளில் அந்த காணி உரிமையாளர்களால் முறைப்படி பற்றைகளை வெட்டி... Read more »

இன்று வழமைக்கு திரும்புகிறது பொதுப்போக்குவரத்து!!

பொதுப் போக்குவரத்து சேவைகள், இன்று (08) முதல் வழமைக்குத் திரும்புமென போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். பொதுப் போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கின்ற போது, விசேடமாக மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து சேவைகளை நடத்தும் போது, ஜனாதிபதி ஊடகப் பிரிவால் ஜூன் 5ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்... Read more »

பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்கம் தொடர்பில் வடக்கு விவசாயிகள் அச்சமடையத் தேவையில்லை!!

தற்போதைய நிலையில் பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்கம் தொடர்பில் வடக்கு மாகாண விவசாயிகள் அச்சமடையத் தேவையில்லை என மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ். சிவகுமார் தெரிவித்துள்ளார். பாலைவன வெட்டுக்கிளி தாக்கம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது;... Read more »

தெல்லிப்பழையில் திடீர் சோதனை!- ஆவா குழுவின் வாள்கள் மீட்பு

யாழில் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் ஆவா குழு உறுப்பினர்களின் வீடுகளில் மேற்கொண்ட சோதனையின்போது அபாயகரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இராணுவப் புலனாய்வுத்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில்... Read more »