. May 2020 – Jaffna Journal

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்காக விண்ணப்பங்கள் நீடிப்பு

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்காக விண்ணப்பங்கள் தொடர்பில் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்காக விண்ணப்பிக்கும் கால எல்லை ஜீலை 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் கொரோனா தொற்றினால் சீரற்ற சமூக நிலையில் நவீனமயமாக்கல்... Read more »

சுமந்திரனின் நேர்காணல் தொடர்பாக மத்திய செயற்குழு கூடி ஆராயும் – சம்பந்தன்

சுமந்திரனின் நேர்காணல் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆராயும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோருக்கும் கூட்டமைப்பின் தலைவர்... Read more »

நடுத்தர வருமானமுடைய குடும்பங்களுக்கு அரச காணியுடன் சலுகை வட்டியில் வீட்டுக்கடன்!!

நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சலுகை வட்டி அடிப்படையில் வீட்டுக் கடன் திட்டத்தை வழங்க நேற்றைய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான காணிகளில் வீடுகளை அமைக்கும் வகையில் 20 முதல் 30 ஆண்டுகளுக்கு தவணை அடிப்படையில் மீளச் செலுத்தும் வகையில் இந்த வீட்டுக்... Read more »

வடமராட்சி கிழக்கில் கிளைமோர்த் தாக்குதல்; துன்னாலையில் ஒருவர் ரிஜடியினரால் கைது

வடமராட்சி கிழக்கு, முச்சந்தியில் பொலிஸாரை அச்சுறுத்தும் வகையில் கிளைமோர் தயாரித்து பொருத்திய சம்பவத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். துன்னாலை குடவத்தை பகுதியைச் சேர்ந்தெ 27 வயதுடையவரே விசாரணைக்காக நேற்றையதினம் இரவு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால்... Read more »

இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என எவரும் எதிர்பார்க்க வேண்டாம் – பந்துல

உலக சந்தையில் கனிய எண்ணெய் பீப்பாயின் விலை குறைவடைந்துள்ளதென்பதற்காக இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என எவரும் எதிர்பார்க்க வேண்டாம். யார் என்ன எதிர்ப்புகளை வெளிப்படுத்தினாலும் இலங்கையில் எரிபொருள் விலை குறையாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரச திணைக்களத்தில் நேற்று (வியாழக்கிழமை)... Read more »

வீதியால் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு விளக்கமறியல்!!

வீதியால் சென்ற பெண்ணுக்கு வார்த்தைகளாலும் சைகைகளாலும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மடம் வீதியில் நடந்து சென்ற 30 வயதுடைய பெண் ஒருவரை நோக்கி வார்த்தைகளாலும் சைகளாலும் பாலியல் தொல்லை கொடுத்தார்... Read more »

ஜூன் முதலாம் திகதி தொடக்கம் யாழ்பாணத்தில் பொதுச் சந்தைத் தொகுதிகள் திறப்பு!!

எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்படவுள்ளன என்று மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார். தற்போதைய நிலமைகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்பொழுது இயல்பு... Read more »

மே 31, ஜூன் 4,5 ஆம் திகதிகளில் நாடுமுழுவதும் ஊரடங்கு!!

நாடுமுழுவதும் வரும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஜூன் 4,5ஆம் திகதிகளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் நாளை மறுதினம் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் ஜூன் முதலாம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்குத்... Read more »

யாழில்உணவகங்கள் -நட்சத்திர விடுதிகள் – திருமண மண்டபங்கள் திறப்பதற்கு அனுமதி – கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை

“உணவகங்கள், நட்சத்திர விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் திறப்பதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனினும் சுகாதார நடைமுறையை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்படும்” என்று மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் மகேஸ் சேனாரட்ன தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நாட்டில்... Read more »

வவுனியாவில் வெடிவிபத்தில் இரு சிறுவர்கள் படுகாயம்!!

செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வாழவைத்தகுளம் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற வெடிவிபத்தில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் 7 வருடங்களுக்கு முன்னர் அமைந்திருந்த இராணுவ முகாமுக்கு அண்மையில் விளையாடிக்கொண்டிருந்த இரு சிறுவர்கள் இனம் தெரியாத பொருள் ஒன்றை எடுத்துசென்று... Read more »

ஒரே நாளில் 150 பேருக்கு கோரோனா தோற்றுள்ளமை கண்டறிவு

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 16 பேர் நேற்று (மே 27) புதன்கிழமை நள்ளிரவு (11.55 மணி) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் ஒரே நாளில் 150 பேர் கோரோனா தொற்றில் இனங்காணப்பட்டமை... Read more »

அச்சுவேலியில் மரம் அரியும் நிலையத்திற்கு விசமிகள் தீ வைப்பு

அச்சுவேலி – பத்தமேனி பகுதியில் உள்ள மரம் அரியும் நிலையத்துக்கு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மரம் அரிவு நிலைய உரிமையாளரினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம்... Read more »

மலையக மக்களிற்காக நாடாளுமன்றத்திலும் வெளியிலும் ஒலித்த ஒரு குரல் இன்று மௌனித்து விட்டது – இரா.சம்பந்தன்

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் அகால மரண செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள... Read more »

யாழ் மாவட்ட வறிய மக்களின் மீளெழுச்சிக்காக கடற்றொழில் அமைச்சால் பல்வேறு உதவித் திட்டங்கள்

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சினால் யாழ் மாவட்டத்தில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் மற்றும் கடற்றொழில் சார்ந்த மக்களின் வாழ்வாதார நலன்கருதி பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.... Read more »

யாழ்ப்பாணத்தின் முதலாவதாக கோரோனோ தொற்றுக்கு இலக்கானவர் வீடு திரும்பினார்!!

யாழ்ப்பாணத்தில் கோரோனோ தொற்றுக்கு இலக்காகி முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபர் சுமார் 65 நாள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். புதிதாக கட்டட ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்வது தொடர்பாக சுவிஸ் நாட்டிலிருந்த வந்த... Read more »

வடமராட்சியில் பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல்!! ; ஒருவர் படுகாயம்!!

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையாக வீதியில்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் நடதப்பட்டுள்ளது. சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மணல் கடத்தல்காரர்களால் பொலிஸாரை இலக்குவைத்து இந்த கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம்... Read more »

நல்லூரில் முதியவரின் உயிரிழப்புக்குக் காரணமான இளைஞர்கள் இருவர் சிக்கினர்

நல்லூர் யமுனா ஏரி வீதியில் தனிமையில் வசித்து வந்த முதியவரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. யாழ்ப்பாணம்,... Read more »

கிளிநொச்சியில் கொரோனா சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் விபத்து

கிளிநொச்சி – இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொரோனா சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த அம்புலன்ஸ் வண்டி ஏ-9 வீதியால் நேற்று (செவ்வாய்க்கிழமை) பகல் சென்றவேளை, கொடிகாமம் – புத்தூர் சந்தியில் முன்னால் சென்ற டிப்பர்... Read more »

சட்டவிரோத செயற்பாடுகளை அறியத்தாருங்கள்- வன்னி பிரதிபொலிஸ்மா அதிபர்

வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை தமக்கு வழங்குமாறு வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு பொறுப்பான வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து... Read more »

ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி விமான நிலையம் மீள திறக்கத் திட்டம்!!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் இயங்கச்செய்வது தொடர்பான திட்டங்கள் அடங்கிய அறிக்கை ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நாடு வழமைக்கு திரும்பியுள்ளதன் காரணமாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை... Read more »