. February 14, 2020 – Jaffna Journal

யாழ் – சென்னை விமானப் போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பாக பரிசீலனை

யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமானப் போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பாக துறைசார் நிபுணர்களுடன் பரிசீலித்து சாதகமான முடிவொன்றினை மேற்கொள்வதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். நேற்று(வியாழக்கிழமை) விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர்... Read more »

காலக்கெடுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது- ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை அறிவிப்பு

யுத்தத்திற்குப் பிந்திய நிலைமாறுகால நீதி நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்கான வெளிப்புற காலக்கெடுக்கள் எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இலங்கை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இடம்பெற்ற பகிரங்கக் கூட்டமொன்றில் உரையாற்றிய ஐ.நா.விற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்... Read more »

யாழ்.மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் நியமனம்!

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய அரசாங்க அதிபர் வேதநாயகன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளமை காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள இவர்... Read more »

எம்.ஏ.சுமந்திரனின் மனைவி மத மாற்றத்திற்காக மாத சம்பளம் பெறுகிறார்: மறவன்புலவு சச்சிதானந்தம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் மனைவி மத மாற்றம் செய்வதற்காக மாத வருமானம் பெறுகிறார் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன். நேற்றையதினம் யாழில் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »

மாங்குளம் வைத்தியசாலை மனிதப் புதைகுழி; எச்சங்கள், ஆடைகள் மீட்பு!!

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் இரண்டாவது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வின் போது மீட்கப்பட்ட எச்சங்களின் அடிப்படையில் 3 நபர்களின் எச்சங்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன், அகழ்வுப் பணிகளை இன்றும் முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்ற நீதிவான் எஸ்.லெலின்குமார் உத்தரவிட்டார். மாங்குளம் வைத்தியசாலை... Read more »