. February 12, 2020 – Jaffna Journal

பகிடிவதை பற்றிய முறைப்பாடுகள் கிடைக்கவில்லை – ஆளுநர்

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் முறைப்பாடுகளை வழங்க வேண்டுமென கோரியுள்ள வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம்.சாள்ஸ், அவ்வாறு முறைப்பாடுகளை வழங்கினால் உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்க தயார் என்றும் அறிவித்துள்ளார். ஆளுநரின் அலுவலகத்தில் நேற்று மாலை... Read more »

விடுவிக்கப்பட்ட காணிகளை விரைவில் பயன்படுத்துங்கள் – வடக்கு ஆளுநர்

விடுவிக்கப்பட்ட காணிகளை இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மக்கள் பாவனைக்கு உட்படுத்த வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் இதுகுறித்த அறிவிப்பை பிரதேச செயலாளர்கள் காணி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துமாறும் அவர் கூறியுள்ளார். ஆளுநர் செயலகத்தில், நேற்றையதினம் பிரதேச செயலாளர்களுடனான விசேட... Read more »

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

முல்லைத்தீவு – மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் சுத்தம் செய்யும் பணிகள் இடம்பெற்று வந்த நிலையில், அங்கு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புனர்வாழ்வு வைத்தியசாலை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், அங்கு காணியை சுத்தம் செய்யும் பணிகள் இடம்பெற்று வந்தன. இதன்போது... Read more »

சி.வி.யின் புதிய கூட்டணிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் வித்தியாசமே இல்லை- கஜேந்திரகுமார்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் கொள்கையில் எந்த வித்தியாசமும் இல்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் உண்மையான, நேர்மையான தலைமைத்துவமாக தமது... Read more »

விடுதிகளில் கலாசார சீரழிவு நடவடிக்கைளுக்கு யாழ்.மாநகர சபை அனுமதிக்கிறதா? 17 வயது சிறுமி மீட்பு!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் அசமந்தப் போக்கால் பதிவு செய்யப்படாத விடுதி ஒன்றில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெறுவது யாழ்ப்பாணம் பிரதேச செயலக அதிகாரிகளால் கண்டறியப்பட்டு அங்கிருந்த 17 வயது நிரம்பிய ஒரு பிள்ளையின் தாயாரான சிறுமி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அந்த சிறுமியின் கணவர் என... Read more »

பகிடிவதையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் மாணவனின் வீட்டின் மீது தாக்குதல்!!

பகிடிவதைக் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் உள்நுழைய இடைக்காலத் தடைவிதிக்கப்பட்ட மாணவனின் வீட்டுக்குச் சென்ற நால்வர், மாணவன் அங்கு இல்லாத நிலையில் வீட்டிலிருந்த பொருள்களை அடித்து உடைத்துவிட்டுச் சென்றுள்ளனர் என்று மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இந்தச் சம்பவம்... Read more »

கூகுளின் சர்வதேச போட்டியில் யாழ்.இந்து மாணவன் வெற்றி!!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் நித்தியானந்தன் மாதவன், சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட கூகுள் கோட் இன் – 2019 ( Google Code-In 2019) போட்டியில் ஒரு பிரிவில் முதலிடத்தை (Grand Prize Winner பட்டம்) பெற்றுள்ளார். இவருக்கான கௌரவிப்பு விழா எதிர்வரும் ஜூன்... Read more »

இலங்கைக்கு அருகில் நில நடுக்கம் ; சுனாமி அச்சுறுத்தல் இல்லை !

இலங்கைக்கு அருகில் நில நடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாதி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த நில நடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையெனவும் சுனாமி அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லையெனவும் அந்த மையம் மேலும் தெரிவித்துள்ளது. குறித்த நில நடுக்கம் இலங்கைக்கு... Read more »

கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

தற்போது நிலவும் காலநிலையை கருத்திற் கொண்டு மாணவர்களை 11 மணி முதல் 3.30 மணி வரையில் வெளிகளச் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளது. அத்தோடு நிலவும் வெப்பமான காலநிலையை கருத்திற்கொண்டு பாடசாலை மட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்... Read more »