. January 1, 2020 – Jaffna Journal

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்!!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (01) முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1047 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த போராட்டம்... Read more »

தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் தமிழர்களின் பிரதிநிதிகளே – அமைச்சர் டக்ளஸ்

தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் தமிழர்களின் பிரதிநிதிகளே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் இந்திய அரசாங்கமோ, இலங்கை அரசாங்கமோ அல்ல. தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்களே அந்த பிரச்சனைகளுக்கு... Read more »

புத்தாண்டு தினத்தில் முச்சக்கர வண்டி கட்டணங்களில் அதிரடி மாற்றம்

அனைத்து முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களும் குறைக்கப்படும் என தேசிய முச்சக்கர வண்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது. புத்தாண்டு தினமான இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி பயணத்தின் முதல் கிலோ மீட்டருக்கான அடிப்படை விலை 60 முதல் 50 ரூபாயாக... Read more »

யாழ்.காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 50 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பு!!

யாழ்.காங்கேசன்துறை துறைமுகத்தை துரிதகதியில் புனரமைப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு துறைமுகங்கள் அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் இக்குறித்த அபிவிருத்தி செயற்பாட்டின் பொருட்டான செயன்முறை திட்டம் தீட்டல் செயற்பாட்டை மேற்கொள்வதற்காக துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளினால் ஆலோசனை சேவை நிறுவனத்திடம்... Read more »

கொழும்பில் மீண்டும் காற்று மாசு – மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

நாட்டின் வளிமண்டலத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த மாசடைவு மற்றும் அதனால் உண்டான தாக்கங்கள் குறைந்திருந்த நிலையில் தற்போது காற்றின் தரம் 158 சுட்டியாக உயர்வடைந்து மாசடைந்து காணப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா தூதரகத்தில் அமைந்துள்ள வளிமண்டலத்திலுள்ள வளியின் தூய்மை... Read more »

‘காணாமல் போனவர்களை முதலைக்கு வெட்டிப் போட்டாச்சு… எதற்கு கத்திக் கொண்டு நிற்கிறீர்கள்?’: போராடும் உறவுகளிடம் கேட்ட தமிழ்ப்பெண்!

“உங்கள் பிள்ளைகளை முதலைக்கு வெட்டிப் போட்டு விட்டார்கள். அவர்கள் திரும்பி வருவார்களா? இங்கு எதற்காக வந்து கத்திக் கொண்டிருக்கிறீர்கள்?“ என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் கேட்டுள்ளார் தமிழ்ப் பெண்ணொருவர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று முன்தினம் (30) கிளிநொச்சியில் நடத்திய போராட்டத்தின் போது இந்த... Read more »

பல்கலைகழகத்திற்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பல்கலைக்கழகத்திற்கு தகுதிபெற்ற போதிலும் உயர் கல்வியைத்தொடரமுடியாத மாணவர்களுக்காக 2020 ஆம் ஆண்டில் 100 பல்கலைக்கழக கல்லுரிகள் University College அமைக்கப்படும் என்று தகவல் தொடர்பாடல், தொழிநுட்பம் உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இதற்கமைவாக அரசாங்௧ அச்சுத்... Read more »

இன்று முதல் இரத்தாகவுள்ள வரிகள்!!

வருமானம் பெறும் போது செலுத்த வேண்டியிருந்த வரி மற்றும் வட்டி வருமானத்திற்கான வரி ஆகியன இன்று (01) முதல் இரத்து செய்யப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. முன்னர் மாதம் ஒன்றுக்கு ஒரு இலட்சத்துக்கும் மேல் வருமானம் பெறும் நபருக்கு வரி செலுத்த வேண்டியேற்றபட்டதுடன் அந்த... Read more »

சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடினால் வடக்கு கிழக்கில் அன்று துக்கதினம் – சிவாஜி

இலங்கையின் சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என அரசு கூறுமாயின் வடக்கு கிழக்கு மக்கள் அன்றைய நாளினை தேசிய துக்க தினமாக அனுஷ்ட்டிக்க நிர்ப்பந்திக்கப் படுவார்கள் என தமிழ்த் தேசிய கடசியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இவ்வாறான நடவடிக்கை... Read more »

ஒற்றுமையாக வாழக்கூடிய சிறந்த சூழலை நாட்டில் உருவாக்குவேன் – புத்தாண்டில் ஜனாதிபதி உறுதி!

அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய சிறந்த சூழலை நாட்டில் உருவாக்குவதே தனது நோக்கம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் மேலும் தெரிவிக்கையில், “மலர்கின்ற இந்த புத்தாண்டு அனைத்து... Read more »

இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற கண் பரிசோதனை மாத்திரம் போதுமானது – ஜனாதிபதி

இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்கு கண் பரிசோதனை மாத்திரம் மேற்கொள்ளுதல் போதுமானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். பயணிகள் போக்குவரத்து அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் நேற்று பிற்பகல் கலந்துரையாடலில் ஈடுபட்டபோதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த... Read more »