. December 3, 2019 – Jaffna Journal

யாழில் நடைபாதை வியாபாரத்திற்கு தடை விதிக்க தீர்மானம் – சுமந்திரன்

எதிர்வரும் காலத்தில் யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பண்டிகைக் காலத்தின்போது நடைபாதை வியாபாரத்தை தடை செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பான வணிகர் கழக பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன்... Read more »

தையிட்டியில் தனியார் காணிக்குள் விகாரை – நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

வலி.வடக்கு தையிட்டியில் தனியார் காணியை ஆக்கிரமித்து இராணுவம் புத்த விகாரை கட்டுவதை சட்டரீதியில் தடுத்து நிறுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சமூக அக்கறை கொண்ட சட்டத்தரணிகளும் அரசியல்வாதிகளும் குறித்த விகாரை கட்டுவதற்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்... Read more »

யாழில் டெங்கு நோய்த் தொற்று அதிகரிப்பு!! இராணுவம் களத்தில்!!

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் டெங்கு நுளம்புப் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கழிவகற்றல் நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதியின் வழிகாட்டல் இந்தப் பணி இடம்பெறுவதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன்... Read more »

கைத்தொலைபேசி வைத்திருப்போருக்கு இலங்கை அரசு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

இலங்கையில் ஓரிரு தொலைபேசிகள், சிம் அட்டைகளை விடவும் அதிகமான சிம் அட்டைகளை கொள்வனவு செய்திருப்போர், பாவிப்போர் பற்றிய விபரங்கள் குறித்த மொபைல் நிறுவனங்கள் ஊடாகத் திரட்டப்பட்டு வருகின்றன. அத்தகையவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாங்கியுள்ள ஆனால் தற்போது பாவிக்காத... Read more »

ஜனவரி 3ம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!!

நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் உறுப்புரை 70இன் பிரகாரம், ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களின்படிநேற்று (2) நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுகிறது என்றும், மீண்டும் 2020 ஜனவரி 3ம் திகதி முற்பகல் 10 மணிக்கு கூடுமென்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more »

மழையுடன் கூடிய வானிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாகவும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல... Read more »