. December 2019 – Jaffna Journal

சிஐடி என கப்பம் வாங்கியவர்களில் ஒருவர் அளவெட்டியில் சிக்கினார்!!

பொலிஸ் புலனாய்வாளர் எனக் கூறி கப்பம் வாங்கிய குற்றச்சாட்டில் அளவெட்டியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்புடைய மற்றொருவர் யாழ்ப்பாணம் சிறையில் மறியலில் இருப்பதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவிக்கு வந்த பின்னர் முன்னாள் போராளிகள், போர்க்... Read more »

யாழில் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள் – அச்சத்தில் மக்கள்!

யாழில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்.அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று(திங்கட்கிழமை) அதிகாலை புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று 45 பவுண் நகை, 30 ஆயிரம் ரூபாய் ரொக்க... Read more »

BMW காருக்கு ஆசைப்பட்டு பல இலட்சங்களை பறிகொடுத்த குடும்பத்தினர்!!

பி.எம்.டபிள்யூ காருக்கும், ஸ்ரேலிங் பவுண்ஸ்க்கும் ஆசைப்பட்டு 31 இலட்ச ரூபாயை குடும்பம் ஒன்று இழந்துள்ளது. யாழில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த குடும்பத்தின் குடும்ப தலைவர் மன்னாரில் பணி நிமிர்த்தம் அங்கு தங்கி நின்று பணியாற்றி வரும் நிலையில் தாயும்,... Read more »

120 தமிழ் பொலிஸாருக்கு வடக்கில் இடமாற்றம்!!

வடக்கு மாகாணத்தில் 120 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தற்போது கடமையாற்றும் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிலிருந்து மாகாணத்துக்குள் வேறு பிரிவுகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம்... Read more »

கொழும்பு, கோட்டை – காங்­கே­சன்­துறைக்கிடையிலான இரு ரயில் சேவைகள் நிறுத்தம்

கொழும்பு, கோட்டை – காங்­கே­சன்­துறை இடையே இயங்கும் இரண்டு ரயில்­களின் சேவை­களை, இன்று முதல் நிறுத்­து­வ­தற்கு ரயில்வேத் திணைக்­களம் தீர்­மா­னித்­துள்­ளது. இதன்­படி 87 மற்றும் 88 இலக்கம் கொண்ட ரயில்கள், இன்று செவ்­வாய்க்­கி­ழமை முதல் இயங்­க­மாட்­டாது. பய­ணி­களின் எண்­ணிக்­கையில் வீழ்ச்சி கார­ண­மா­கவே இந்த முடிவு... Read more »

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அதிகரிக்கப்படும் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இம்முறையும் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய 2016ஆம் ஆண்டின் மூன்றாவது சுற்று நிருபத்திற்கு அமைய அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இதன் மூலம் 2015ஆம் ஆண்டைவிட... Read more »

சட்டவிரோதமாக தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த ஐவர் கைது

சட்டவிரோதமாக தென்னிந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு வருகை தந்த ஐவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த 26 ஆம் திகதி இவர்கள் நெடுந்தீவு பகுதிக்கு படகு மூலம் வருகை தந்துள்ளனர். இவ்வாறு வருகை தந்த இலங்கையை சேர்ந்த 5 அகதிகளையும் கடற்படையினர் கைது... Read more »

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் கொலை!!

கிளிநொச்சி – மலையாளபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. அத்தோடு இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக... Read more »

வடக்கு மாகாண ஆளுநரை சற்றுமுன்னர் நியமித்தார் ஜனாதிபதி

வடக்கு மாகாண ஆளுநராக, இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரி பி.எஸ்.எம். சாள்ஸ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். இலங்கை நிர்வாக சேவை அலுவலகர் ஒருவரை அவரது சேவைக்கான வரப்பிரசாதங்களுடன் இணைத்து ஆளுநர் பதவிக்கு நியமிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு... Read more »

நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை மறித்து சரமாரி வாள்வெட்டு!

நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்த்தானின் வாகனத்தை வழிமறித்த இனந்தெரியாத நபர்கள், சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடாத்திய நிலையில், மயிரிழையில் நாடாளுமன்ற உறுப்பினர் உயிர் தப்பியிருக்கின்றார். வவுனியா பாவக்குளம் பகுதியில் மக்கள் சந்திப்புக்களை முடித்து வவுனியா நோக்கி பயணித்தவேளை, அப்பகுதியில் நின்ற சிலர் வாள்களால் நாடாளுமன்ற உறுப்பினரை... Read more »

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலையானார்!!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது. 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம் அவருடைய கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும்... Read more »

வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ்.பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இடமாற்றம்!

வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனாநாயக்க, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன ஆகிய இருவருக்கும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், சப்ரகமுவ மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர்... Read more »

கொழும்பில் உள்ள சம்பந்தனின் வீட்டுக்கு சிக்கல்?

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தங்கியிருக்கும் தனது உத்தியோகபூர்வ இல்லத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும்வரை பயன்படுத்த கடந்த அரசாங்கம் அனுமதி வழங்கியது. அந்தவகையில் கொழும்பு 7, மகாகமசேகர மாவத்தையில் உள்ள பி 12 இல் இருக்கும் உத்தியோகபூர்வ குடியிருப்பை அவருக்கு வழங்க... Read more »

நாடாளுமன்றத் தேர்தலில் ஆசன பங்கீடு தொடர்பில் இணக்கம் – மாவை சேனாதிராஜா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள் வழங்குவது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் முன்றாம் திகதி இறுதி முடிவு அறிவிக்கப்படும் எனவும் இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம் யாழிலுள்ள... Read more »

தனியார் நிறுவனங்கள் பிரதேசசபையில் முறைப்படி அனுமதி பெறவேண்டும் ; வலிவடக்கு பிரதேசசபைத் தவிசாளர்

வலிவடக்கு பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட வீதிகளில் கம்பங்களை நிறுவி சேவைகளை வழங்குகின்ற தனியார் நிறுவனங்கள் பிரதேசசபையில் முறைப்படி அனுமதி பெறவேண்டும் என வலிவடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் வீதி ஓரங்களில் கம்பங்களை நிறுத்தி சேவைகளை வழங்குதல் தொடர்பான... Read more »

விசாரணையின்றி மரணச் சான்றிதழ் வழங்குவது பிழையானது – மாபெரும் போராட்டத்துக்கு சி.வி. ஆதரவு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் போராட்டத்துக்கு வடக்கின் முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவளித்துள்ளார். இது குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவரால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “கிளிநொச்சி கந்தசாமி கோயில் முன்றலில்... Read more »

சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழ் பெற அதிவேக ‘Fast Track System’ முறை

சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழை பெறுவதற்காக வருபவர்களுக்கு துரித கதியில் சேவையை பெற்றுக் கொடுப்பாதற்காக அதிவேக ‘Fast Track System’ ஒன்றை ஆரம்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நுகேகொடையில் அமைந்துள்ள போக்குவரத்து மருத்துவ நிலையத்திற்கு முன்பாக மருத்துவச் சான்றிதழைப்... Read more »

சீனாவிலிருந்து 8 புதிய ரயில்கள்; புகையிரதசேவை இலத்திரனியல் மயமாகும்

எதிர்வரும் வருடம் 08 புகையிரதங்கள் சேவையில் இணைக்கப்படும் என  புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார். நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள குறித்த 08 புகையிரதங்களில் 04 புகையிரதங்கள் எதிர்வரும் ஜனவரி மாதத்தில்... Read more »

ராஜித எம்.பி. கைது!

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் ராஜித சேனாரத்ன, குற்ற விசாரணைப் பிரிவினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நாரஹன்பிட்டியவில் உள்ள லங்கா ஹொஸ்பிடல் இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில்... Read more »

சம்பந்தன், சுமந்திரன் பேசும் ஐக்கியம் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல- சுரேஸ்

ஐக்கியத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால் சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் பேசச் கூடிய ஐக்கியம் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து... Read more »