. November 6, 2019 – Jaffna Journal

யாழ் மாநகர சபையில் அன்றா நிறுவனம் தொடர்பில் பார்த்திபன் கேள்வி!!

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் அன்றா நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளுக்காக செலுத்த வேண்டிய 22 இலட்சத்து 64 ஆயிரத்து 104 ரூபா பல மாதங்களுக்கு மேலாக செலுத்தப்படாமை தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்திபன் கேள்வி எழுப்பினார்.... Read more »

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு புளொட் ஆதரவு!!

ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் தீர்மானித்துள்ளது. ஏற்கனவே தமிழைரசுக் கட்சியும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது புளொட்டும் சஜித்தை ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர்... Read more »

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சிவாஜிலிங்கம் போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அவர் இன்று (புதன்கிழமை) முற்பகல் 10 மணியளவில் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தார். சிறைகளில் வாழும் தண்டனை பெற்ற அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு மற்றும்... Read more »

வல்வெட்டித்துறை மக்கள் வங்கி முகாமையாளரின் வீட்டில் பொலிஸார் தேடுதல்!! இருவர் கைது!!

வல்வெட்டித்துறை மக்கள் வங்கி முகாமையாளரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜீப் வாகனமும் தாமும் தேடிவந்த வாகனமும் வேறு எனத் தெரிவித்துள்ள பொலிஸார், நீதிமன்றின் உத்தரவின் பேரில் வீட்டுக்குள் சல்லடை போட்டுத் தேடுதல் நடத்தினர். அத்துடன் வங்கி முகாமையாளரின் துணைவியாரின் சகோதரர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.... Read more »

மின்துண்டிப்பிற்கு எதிராக வவுனியாவில் இரவிரவாக போராட்டம்!

வவுனியாவில் 50இற்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியதை தொடர்ந்து, பொறுமையிழந்த மக்கள் நேற்றிரவு வீதிக்கிறங்கினார்கள். வவுனியாவில் நான்கு இடங்களில் வீதிகளை மறித்து மக்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். இதனால் ஏ9 வீதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது. நேரம் செல்லச்செல்ல போராட்டம் தீவிரமடைந்து வவுனியப புகையிரத நிலையத்திற்கு அண்மையாக... Read more »

பல வாள்வெட்டு வன்முறைகள், கொள்ளை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் தேடப்பட்டு வந்த ஆவா நீதி மன்றில் சரண்!!!

யாழ்ப்பாணத்தில் பல வாள்வெட்டு வன்முறைகள், கொள்ளை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கடந்த 2 வருடங்களாக தேடப்பட்டு வந்த “ஆவா” என காவற்துறையினரால் விழிக்கப்படும் இளைஞர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று சரணடைந்தார். சந்தேகநபரை வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.... Read more »

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையக் கூடும்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று தற்காலிகமாக சிறிது குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. எனினும் சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் காணப்படுகின்றது. கொழும்பு,... Read more »