. November 2019 – Jaffna Journal

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக அங்கஜன் எம்.பி நியமனம்

கல்வி இராஜாங்க அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நாடாளுமஎன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இடைக்கால அரசில் விவசாய இராஜாங்க அமைச்சர் பதவியைக் கேட்டிருந்தார். எனினும் அவருக்கு கல்வி... Read more »

தடைகளுக்கு மத்தியில் யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தடைகள் விதிக்கப்பட்டு மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டாலும் மாவீரர்களுக்கு மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலை வளாகத்தினுள் 26ஆம் திகதி மற்றும் 27ஆம் திகதி ஆகிய தினங்களில் எந்த நிகழ்வுகளையும் நடத்தக் கூடாது என மாணவ... Read more »

தொலைத்தொடர்பு வரியை 25 வீதத்தினால் குறைப்பதற்கு தீர்மானம்!

உடன் அமுலுக்கு வரும் வகையில் வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். வீட்டுப் பொருட்களுக்காக அறவிடப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான தேச நிர்மாண வரி, பொருளாதார சேவைகளுக்கான கட்டண வரி, வங்கிகள் மற்றும் நிதி... Read more »

கொடிகாமம், வடமராட்சியில் இராணுவத்தினரின் தடையை மீறி மாவீரர் தின நிகழ்வு அனுஷ்டிப்பு

கொடிகாம் மற்றும் வடமராட்சியில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள பகுதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக சுடரேற்ற முற்பட்டபோது இராணுவத்தினர் அதனை தடுத்தி நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து இராணுவ முகாமுக்கு அருகில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இறுதிப் போரில் உயிர்நீத்த மாவீரர்களின் நினைவுதின நிகழ்வுகள் தமிழர்கள் செறிந்து... Read more »

வரிகளைச் சீர்திருத்தவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்கவும் ஜனாதிபதி உத்தரவு!!

புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், வரிகளைச் சீர்திருத்தவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்கவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... Read more »

யாழ்.பல்கலை. வளாகத்துக்குள்ளிலிருந்து அனைவரையும் வெளியேற உத்தரவு!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பிற்பகல் 2 மணியுடன் கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் வெளியேறுமாறு நிர்வாகம் பணித்துள்ளது. அனைத்துப் பீட மாணவர்களுக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய இன்றும் நாளையும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் இன்று பல்கலைக்கழக நிர்வாகத்தின் தடையையும்... Read more »

நினைவுகூரும் உரிமையை எவரும் தடுப்பதற்கில்லை – அமைச்சர் டக்ளஸ்

எமது உரிமைப் போரிலும் அதன் பின்னரான அழிவு யுத்தத்திலும் இதுவரை போராளிகள் முதற்கொண்டு பொதுமக்கள் வரை எண்ணற்ற உயிர்களை நாம் இழந்திருக்கின்றோம். அதனால் எமது மக்களின் ஒவ்வொரு இல்லங்கள் தோறும் இழப்புகளின் துயரங்கள் இருந்து வருகின்றது. அந்தவகையில் உயிரிழந்தவர்களை நினைவேந்துவது ஒவ்வொரு சாதாரண குடி... Read more »

சீரற்ற காலநிலை காரணமாக ஐவர் உயிரிழப்பு – யாழ் மாவட்டத்திற்கும் சிவப்பு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 573 குடும்­பங்­களைச் சேர்ந்த 2272 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. பல இடங்கள் வெள்ளம் காரணமாக நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் கடந்த... Read more »

புதிய 38 அமைச்சர்கள் பதவியேற்பு!! தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் ஒருவரும் இல்லை!!

புதிய இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்கள். 38 இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர். இதில் தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் யாரும் இணைக்கப்படவில்லை. இராஜாங்க அமைச்சர்கள் சமல் ராஜபக்ச- பாதுகாப்பு வாசுதேச- நீர்வழங்கல் காமினி லோகுகே –... Read more »

தமிழ் கட்சிகளில் மாற்று அணிகள் உருவாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்! -கூட்டமைப்பு

தமிழ் கட்சிகளில் மாற்று அணிகள் உருவாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணியொன்றை உருவாக்கி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இந்த விடயம்... Read more »

தடையை மீறி யாழ்.பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி!!

தடைகளை மீறி யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர்களுக்கு மாணவர்கள் உணர்வூர்வமாக அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்வு இன்று முற்பகல் 10.15 மணியளவில் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகத்தால் தடை விதித்து உத்தரவு வழங்கப்பட்ட நிலையில்... Read more »

கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர்களுக்கு மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக இராச பாதை வீதியில் இன்று காலை 10.30 மணியளவில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வுகள்... Read more »

ஜனாதிபதி கட்டாயப்படுத்தியும் வடக்கு ஆளுநர் பதவியை ஏற்க மறுத்துவிட்டேன் – முரளிதரன்

வடக்கு மாகாண ஆளுநர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கட்டாயப்படுத்தினார். ஆனால் நான் அதனை மறுத்துவிட்டேன். நாட்டில் கிரிக்கெட்டை வளர்ப்பதற்கான ஒரு செயற்திட்டத்தை வழங்கினால், அதனை முன்னெடுப்போன் என்று ஜனாதிபதியிடம் திட்டவட்டதாகத் தெரிவித்துவிட்டேன்” இவ்வாறு முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார். ஜனாதிபதி கோத்தாபய... Read more »

கிளிநொச்சியில் நாய் இறைச்சி?

கிளிநொச்சியில் நாய் இறைச்சி புழக்கத்தில் உள்ளதா என்கின்ற சந்தேகம் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. நேற்றையதினம் 26-11-2019 கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக உள்ள வியாபார நிலையம் ஒன்றின் முன்பாக நாய் ஒன்றின் தோல் காணப்பட்டுள்ளது. இறைச்சிக்காக விலங்குள் வெட்டப்பட்டு இறைச்சி பிரித்தெடுக்கப்பட்ட பின்னர்... Read more »

மாணவர்கள் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைய தடை!

அனைத்துபீட மாணவர்களுக்கும் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று(புதன்கிழமை) மற்றும் நாளை இவ்வாறு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைய பல்கலைக நிர்வாகம் தடை விதித்துள்ளதாக கூறப்படுகின்றது. மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தினுள் நுழைவதனையும் அனுமதி அளிக்கப்படாத எந்தவொரு நடவடிக்கையில் ஈடுபடுவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் நிர்வாகம்... Read more »

நாட்டின் 6 மாவட்டங்களை மையமாகக்கொண்டு விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம்!

நாட்டின் 6 மாவட்டங்களை மையமாகக்கொண்டு விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இன்றைய தினம்(புதன்கிழமை) இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர், டொக்டர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். டெங்கு நோயாளர்கள் அதிகளவில் பதிவாகியுள்ள மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பை மேற்கொள்ள... Read more »

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ராஜபக்சக்களின் அரசுக்கு ஒத்துழைக்கத் தயார் – கூட்டமைப்பு

இந்தியாவுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்கும் நடவடிக்கை, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் நீதி, காணி விடுவிப்பு, இளையோருக்கான வேலைவாய்ப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்.இவ்வாறு கூட்டமைப்பின் பேச்சாளரான... Read more »

நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த புதிய அரசாங்கம் ஆவன செய்யும் – சி.வி.விக்னேஷ்வரன்

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் எந்த இடையூறுகளும் இன்றி நடைபெறுவதற்கு புதிய அரசாங்கம் ஆவன செய்யும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மாவீரர் தினத்தை முன்னிட்டு அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »

யாழ்ப்பாணம் மாநகரை சுத்தப்படுத்தும் பொலிஸார்!!

யாழ்ப்பாணம் மாநகரை சுத்தப்படும் சிறப்பு செயற்திட்டம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கமைய யாழ்ப்பாணம் முனியப்பர் கோயில் முன்றலில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணி முதல் குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடு முழுவதும் சுற்றுச் சூழலை சுத்தப்படுத்தும்... Read more »

மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும்!!

நாட்டில் வட கிழக்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றதுடன் 2019 நவம்பர் 27ஆம் திகதியிலிருந்து நாடு முழுவதும் முழுமையாக தாபிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காணப்படும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து மேலும்... Read more »