. October 7, 2019 – Jaffna Journal

ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வருகிறது

ரயில்வே ஊழியர்கள் தமது பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று நண்பகல் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இந்த முடிவுக்கு வந்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதனால் தொடருந்து சேவைகள் இன்று திங்கட்கிழமை மாலை முதல் வழமைக்கு திரும்பும் என... Read more »

சிவாஜிலிங்கத்திற்கு கொலை அச்சுறுத்தல் – எதனையும் எதிர்கொள்ளத் தயார் என்கிறார் சிவாஜி

தொலைபேசி மூலமாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். கொழும்பில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும்... Read more »

அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டது – 35 வேட்பாளர்கள் களத்தில்

ஜனாதிபதி தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இரண்டு எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரையில்... Read more »

பணிப்புறக்கணிப்பை கைவிடுமாறு அரச துறை ஊழியர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுரை!!

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் உள்பட அனைத்து அரச துறை ஊழியர்களையும் உடனடியாக பணிக்குத் திரும்புமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. சம்பள முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே ஊழியர்கள் கடந்த இரண்டு வாரமாக தொடர் பணிப்... Read more »

ரயில் சேவையை நடத்த இராணுவத்துக்கு அனுமதியளித்தார் அமைச்சர்

தொடருந்து இயந்திர இயக்குனர்களாக (சாரதிகள்) இராணுவ அணியை கடமைக்கு அமர்த்த போக்குவரத்து அமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளார். தொடருந்து சேவையை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி பிரகடனப்படுத்திய நிலையில் போக்குவரத்து அமைச்சு இந்த அனுமதியை ரயில்வே பொது முகாமையாளருக்கு வழங்கியுள்ளது. சம்பள முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து... Read more »

சிவாஜிலிங்கம் வேட்பு மனுவை தாக்கல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் – செல்வம் எச்சரிக்கை!

எமது கட்சியை சேர்ந்த சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தால் அவரை கட்சியிலிருந்து நீக்குவதா, இல்லையா என தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானம் எடுக்கும் என்று ரெலோவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா வைரவ புளியங்குளத்தில் அமைந்துள்ள... Read more »

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: மீள் திருத்தம் செய்ய விரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு

5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தன. இந்நிலையில் தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்தத்துக்காக எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த மாணவர்கள் அதற்கான பாடசாலை... Read more »

மானிப்பாயில் விசேட சுற்றிவளைப்பில் இளைஞன் கைது!

மானிப்பாயில் தனு ரொக் என்ற இளைஞனின் வீட்டை சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைத்து அவரைக் கைது செய்தனர். மானிப்பாய் லோட்டன் வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு அதிரடிப்படையினரும் பொலிஸாரும் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர். பேருந்து ஒன்றில்... Read more »