. October 4, 2019 – Jaffna Journal

வடக்கில் நாளை மின் தடை!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக, வடக்கு மாகாணத்தில், நாளைய தினம் மின்சாரம் தடைப்படவுள்ளது. நாளைய தினம் நண்பகல் 12.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, வடக்கு மாகாணத்தின், யாழ்ப்பாணம், கிளிநொச்சி,... Read more »

ஆளுநரை சந்தித்த தென்னிந்திய தமிழ் சினிமா இயக்குனா்கள்!!

தென்னிந்திய தமிழ் சினிமா இயக்குனா்களான பாரதிராஜா மற்றும் அமீா் ஆகியாா் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனை நோில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனா். இந்த சந்திப்பு நேற்று மாலை ஆளுநா் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. சந்திப்பின்போது இரு இயக்குனா்களுக்கும் ஆளுநா் சுரேன் ராகன் நினைவு பாிசுகளை வழங்கினாா். Read more »

இலங்கை பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் அதிகரித்து செல்கின்றது!

இலங்கை பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் அதிகரித்து செல்வதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வருடாந்தம் 3000 முதல் 3500 வரையான புதிய மார்பக புற்றுநோயாளர்கள் கண்டறியப்படுவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 25 வருடங்களில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை... Read more »

கொழும்பு ஹோட்டல்களிற்கு தாக்குதல் எச்சரிக்கை!!

கொழும்பில் உள்ள பல ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட பிரிவு ஒன்றை அமைத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கையொப்பதுடன் கடந்த இரண்டாம் திகதி கொழும்பில் உள்ள ஹோட்டல்கள் சிலவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்... Read more »

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை வெளியாகின்றது!!

2019ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை வெளியிடப்படவுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய பரீட்சை முடிவுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் நாளை முதல் பார்க்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்த... Read more »

வழுக்கையாறு இந்து மயானத்தில் மின் தகனம் பயன்பாடு!!

வட்டுக்கோட்டை வழுக்கையாறு இந்து மயானத்தை “மின் தகனம்” பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முக்கிய கலந்துரையாடல் நாளைமறுதினம் (ஒக்.6) ஞாயிற்றுக்கிழமை இடம்பெறுகிறது. வட்டுக்கோட்டை வழுக்கையாறு இந்து மயான அபிவிருத்திக் குழுக் கூட்டம் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை மூளாய் வீதி ஸ்ரீகணேசா வாசிகசாலையில் இடம்பெறவுள்ளது. குழுவின் உப தலைவர்... Read more »

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளருக்கு ஆதரவு – சி.வி.விக்னேஸ்வரன்

வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டால் அவரை ஆதரிக்க தயாராக இருப்பதாக வடக்கு முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள நேற்று (வியாழக்கிழமை) காலை நல்லூரிலுள்ள விக்னேஸ்வரனின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்தனர். இதன்போது விக்னேஸ்வரனை பொதுவேட்பாளராக களமிறங்கும்படி... Read more »

யாழில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்!!

யாழ்ப்பாண மானிப்பாயில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 62 வயது முதியவர் மானிப்பாய் பொலிஸாறால் கைது செய்யப்பட்டுள்ளார். முத்துதம்பி வீதி மானிப்பாய் பகுதியில் வசிக்கும் 62 வயதுடைய நாகலிங்கம் யோகராசா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். தனது வீட்டிற்கு தனது நண்பனின் மகளான 14 வயது... Read more »