. October 3, 2019 – Jaffna Journal

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்ய்ப்பட்ட அதிபருக்கு விளக்க மறியல் நீடிப்பு

கடந்த மாதம் 20ம் திகதி மாணவர் அனுமதிக்கு பெற்றோரிடம் லஞ்சம் பெறும்போது  லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேரடியாக  கைது செய்யப்பட்ட அதிபர் நிமலன் பருத்தித்துறை நீதிமன்றினால்  இன்று ஒக்டோபர் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இது தொடர்பிலான வழக்கு இன்று கொழும்பு மஜிஸ்ரேட்... Read more »

செயற்கை கையினை உருவாக்கிய மாணவனை பாராட்டி கௌரவித்த ஆளுநர்!!

போர் கண்டு வீழ்ந்துபோயிருப்பினும் மீண்டும் எழுவதற்கான முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கும் இந்த தேசத்தில் பலம் கொண்ட முயற்சிகள் ஆங்காங்கே பரந்துள்ளன.அந்த பலம் கொண்ட முயற்சிகளை கண்டறிந்து அவற்றுக்கு நாம் கைகொடுப்போம் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். மாற்றுவலுவுள்ளோருக்கான உணர்திறன் முறையுடனான செயற்கை கையினை... Read more »

கோண்டாவிலில் கடையடைப்பு போராட்டம்!!

வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலால் உயிரிழ்ழந்த இரும்பக உரிமையாளரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறும் நிலையில் அவரது கொலையைக் கண்டித்தும் நீதிகோரியும் கோண்டாவில் உப்புமடப்பகுதியில் கடைகள், கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா கேதீஸ்வரன் (வயது -47)... Read more »

தமிழர்கள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்க வேண்டும் – சிவாஜி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்க தமிழ் கட்சிகள் தயாராக வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழில் இன்று (வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு... Read more »

பலாலி விமானநிலையம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றம்!

பலாலி விமான நிலையம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கையில் கொழும்பு கட்டுநாயக்க, கொழும்பு இரத்மலானை, மட்டக்களப்பு மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்கள் ஆகியவை காணப்படுகின்ற நிலையில் யாழ்ப்பாணத்துடன் சேர்த்து தற்பொழுது நாட்டில் 5 சர்வதேச விமான நிலையங்கள் காணப்படுகின்றன.... Read more »

250 முஸ்லிம் குடும்பங்களைக் குடியமர்த்த யாழ்ப்பாணத்தில் இரட்டைத் தொடர்மாடி – அமைச்சரவை ஒப்புதல்

யாழ்ப்பாணத்தில் காணியற்றவர்களாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 250 முஸ்லிம் குடும்பங்களுக்கு வழங்குவதற்காக இரட்டைத் தொடர்மாடிகளை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தனியார் ஒருவரால் புதிய மூர் வீதியில் அமைந்துள்ள காணி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. அதிலேயே இந்த இரட்டை தொடர்மாடிகளைக் கொண்ட 250 குடியிருப்புகளை அமைப்பதற்கு... Read more »

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு நால்வர் விண்ணப்பம்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு, எதிர்வரும் ஒக்ரோபர் 7ஆம் திகதியுடன் விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நிறைவடையவுள்ள நிலையில், இன்றுவரை 4 பேர் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருக்கின்றனர். இவர்களில் இருவர் புலம்பெயர் தமிழ்ப் பேராசிரியர்கள் ஆவர். ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த பேராசிரியர்... Read more »

ஆசிரியர்களின் தொடர் வேலைநிறுத்த போராட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

ஒருவார கால தொடர் லேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென எடுக்கப்பட்ட முடிவு மாற்றப்பட்டுள்ளதாகவும், தற்காலிகமாக அந்த போராட்டத்தை ஒத்திவைத்திருப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென... Read more »

புலிகளை அழிப்பதற்கு ஒத்துழைத்த சர்வதேசம் இனப்பிரச்சினையை தீர்த்துவைக்க வேண்டும் – சம்பந்தன்

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய நிலையில், இனப்பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு அதிக பிரயத்தனம் கொள்ளவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அந்த சூழலில் பிரித்தானியா உட்பட இணைத்தலைமை நாடுகளாவிருந்த நாடுகளிற்கு இனப் பிரச்சினைக்கு நிச்சயம்... Read more »

காணாமல் போனவர்கள், அரசியல் கைதிகள், காணி விடுப்பு – உடனடியாக தீர்த்து வைப்போம் என்கிறார் அநுர

மக்கள் சக்திக்கு வாக்களித்து வெற்றியடையச் செய்தால் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைப்பதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். இதன்படி காணாமல் போனவர்கள், அரசியல் கைதிகள், காணி விடுவிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வழங்கப்படும்... Read more »

தமிழ் மக்கள் பேரவையின் கட்சிகளுடனான சந்திப்பு ஆரம்பம்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான பொதுவான தீர்மானத்தை எட்டும் வகையில் தமிழ் மக்கள் பேரவையினால் தமிழ் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகளை சந்திக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமயத் தலைவர்கள், புத்திஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள், புலமைசார் வல்லுநர்களை உள்ளடக்கியதாக... Read more »

என்னை ஆதரிக்க கூட்டமைப்பு எவ்வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை – சஜித்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னை ஆதரிக்க எவ்வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்தோடு ஆதரவைப் பெறுவதற்காக யாருடைய நிபந்தனைகளுக்கும் இணங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »