. October 1, 2019 – Jaffna Journal

ஜனாதிபதி தேர்தலுக்கு 13 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்!!

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருவதுடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை, 13 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனரென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்று (30) மட்டும் நான்கு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். கெடகொட கமகே ஜயந்த பெரேரா, சிறிபால அமரசிங்க,... Read more »

தமிழ் மக்கள் ஓரணியில் நிற்பதற்கான முயற்சியை தமிழத் தேசியக் கட்சிகள் முன்னெடுக்க வேண்டும் ; சிவாஜிலிங்கம்

தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் நிற்பதற்கான முயற்சியை தமிழத்தேசியக் கட்சிகளோ அல்லது தமிழ் மக்கள் சார்ந்து செயற்படுகின்ற பொது அமைப்புக்களோ விரைந்து முன்னெடுக்கவேண்டும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழ் மக்கள் ஓரணியில் நிற்பது தொடர்பில் பல கருத்துக்கள் வெளிவருகின்ற... Read more »

காணாமலாக்கப்பட்ட சிறுவர்களை விடுவிக்குமாறு கோரி போராட்டம்!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். கல்வியங்காடு பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஒன்றுகூடிய காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பேரணியாக காணாமல்போனோருக்கான அலுவலகம் வரை செல்லவுள்ளனர். அங்கு மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த போராட்டத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள்... Read more »

தமிழர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என சஜித் நினைப்பது தன்னைதானே ஏமாற்றிக் கொள்ளும் செயல் – சி.வி.விக்னேஸ்வரன்

தமிழர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என சஜித் பிரேமதாச நினைப்பது தன்னைதானே ஏமாற்றிக் கொள்ளும் செயலுக்கு ஒப்பானது என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கு பதிலளிக்கும் வகையில்... Read more »

கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு!!

கொக்குவில் பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்த தாக்கியவர்கள் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியும் தமக்கான நீதியைப் பெற்றுத் தருமாறும் கோரி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். இதற்கமைய யாழிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) அவர்கள் இந்த முறைப்பாட்டை... Read more »

வாள்வெட்டுக்கு இலக்கான நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு!

யாழில் வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான இரும்பக உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் இடம்பெற்று 3 வாரங்களாக சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று (திங்கட்கிழமை) இரவு உயிரிழந்தார். கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா கேதீஸ்வரன் (வயது... Read more »

தொடரும் ரயில்வே தொழிற்சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. ரயில்வே தொழிற்சங்க ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் முகமாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவிற்கும்... Read more »

நீராவியடி விவகாரம் – யாழில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கு அனைவருக்கும் அழைப்பு!!

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளையை அவமதித்து சட்டத்தை கையில் எடுத்த ஞானசார தேரர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த பேரணி எதிர்வரும் 5ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு யாழில் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ்... Read more »