. September 20, 2019 – Jaffna Journal

யாழ்.இந்து கல்லூரி அதிபர் கைது!!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் சதா நிமலன், கையூட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார். கையூட்டுப் பெற்றுக்கொண்ட போதிய ஆதாரங்களுடன் இன்று நண்பகல் அவர் கைது செய்யப்பட்டார் என்று ஆணைக்குழுவால் வடக்கு மாகாண... Read more »

யாழ். பல்கலைக்கழக ஊழியர்களால் பேரணி முன்னெடுப்பு

யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். தொடர்ந்து நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்த பேரணி இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருந்து பேரணியாக வந்த ஊழியர்கள் பிரதான நுழைவாயிலை... Read more »

தேசிய மட்ட கணித புதிர் போட்டியில் வடக்கு மாகாணம் முதலிடம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு தேசிய மட்ட கணித புதிர் போட்டியில் கனிஸ்ட பிரிவில் வட. மாகாண அணியினர் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். அகில இலங்கை பாடசாலைகளுக்கான தேசிய மட்ட கணித புதிர் போட்டி நேற்று (வியாழக்கிழமை) கொழும்பு மிபேயிலில் நடைபெற்றது. கனிஸ்ட பிரிவினருக்கான போட்டியில் வடக்கு... Read more »

அரசியல் மட்டுமன்றி மனித நேயத்தையும் மீள கட்டியெழுப்ப வேண்டும் – சுரேன்

இந்த தேசத்தை மீளவும் கட்டியெழுப்பும் போது அரசியல் மட்டுமன்றி மனித நேயத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அரச புகைப்பட ஆலோசனைக்குழு, கலாசார அமைச்சு, இலங்கைக் கலைக்கழகம், கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டிலான அரச... Read more »

யாழில் திறக்கப்பட்ட பிரமிட் நிறுவனத்தை மூட யாழ்.மாநகர சபையில் பிரேரணை

குளோபல் லைவ் ஸடரைல் லங்கா நிறுவனத்தினை உடனடியாக மூடுமாறும் அவ்வாறு மூடமறுக்கும் பட்சத்தில் தங்கள் மீது சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறித்த நிறுவனத்தற்கு அடுத்த மூன்று வேலை நாட்களுக்குள் கடிதம் அனுப்பப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை... Read more »

யாழ். பல்கலை ஆட்சேர்ப்பு விடயத்தில் இன, பிரதேச பாகுபாடுகள் பார்க்கப்படுவதில்லை – ஹக்கீம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு ஆட்சேர்ப்பு விடயத்தில் இன, பிரதேச பாகுபாடுகள் பார்க்கப்படுவதில்லை என நீர்வழங்கல் நகர திட்டமிடல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றம் கூடியது. இதன்போது நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ்... Read more »

பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு எதிராக நடவடிக்கை!!!

யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத்துக்குள் வைத்து பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிய திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு மீது மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்ய கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்காக நீதிமன்றக் கட்டடத்துக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், பொலிஸ் உத்தியோகத்தரின் கன்னத்தில்... Read more »